ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஹெல்த்ல கவனம் ப்ளீஸ்! தினமும் அரைமணி நேர உடற்பயிற்சி செய்யும் மாயாஜாலம் தெரியுமா?

ஹெல்த்ல கவனம் ப்ளீஸ்! தினமும் அரைமணி நேர உடற்பயிற்சி செய்யும் மாயாஜாலம் தெரியுமா?

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

Health Care | ஒருவர் நீண்ட ஆயுளை பெற தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் தெளிவில்லை.இந்த நிலையில் சுமார் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விரிவான மிகப்பெரிய ஆய்வில் இதற்கான பதில் கிடைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்த நவீன கால வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் பலரின் உடல் ஆரோக்கியம் வெகு சீக்கிரமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது.

  இந்த சூழலில் ஒருவர் தனது ஆரோக்கியத்தில் அக்கறை வைத்துள்ளாரா இல்லையா என்பதை கண்டறிய மிகவு எளிய வழி அவர் தனது உடல் செயல்பாடுகளுக்கு தனி நேரம் ஒதுக்குகிறாரா, இல்லையா என்பதை பொறுத்தது. பொதுவாக உடற்பயிற்சி நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது என்பதை நாம் அறிவோம். ஆனால் ஒருவர் நீண்ட ஆயுளை பெற தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் தெளிவில்லை.

  இந்த நிலையில் சுமார் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விரிவான மிகப்பெரிய ஆய்வில் இதற்கான பதில் கிடைத்துள்ளது. 1,16,000-க்கும் மேற்பட்ட நபர்களின்உடல்செயல்பாடு பதிவுகளை உள்ளடக்கிய இந்த விரிவான ஆய்வில், வாரத்திற்கு 300 முதல் 600 நிமிடங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் மிதமான உடல் செயல்பாடுகள் இறப்பு அபாயத்தை கணிசமாக குறைப்பது தெரிய வந்துள்ளது. அதே போல குறைந்தபட்ச நிமிடங்கள் என்று பார்க்கும் போது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்தால் கூட இறப்பு அபாயம் கணிசமாக குறையும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது வாரத்துக்கு 2.5 மணி நேரம்.

  Read More : உடல் எடையை குறைக்க காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்..!

  இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உடல் செயல்பாடுகள் பற்றி விரிவான சுய அறிக்கைகளுடன் ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்க கேட்டு கொள்ளப்பட்டது. கடந்த 1988 முதல் 2018 வரை சுமார் 1,16,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் அளித்த பதிலை வைத்தும், சுகாதார வல்லுநர்களின் பின்தொடர்தலை வைத்தும் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. முடிவில் மிதமான கால அளவில் செய்யப்படும் உடல் செயல்பாடுகள் கூட மரணங்களின் அபாயத்தை குறைப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  தற்போது பெரியவர்கள் வாரத்திற்கு 150-300 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு 75-150 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் ஆய்வில் பங்கேற்றவர்களில் வாரத்திற்கு 150-300 நிமிடங்கள் மிதமான வொர்கவுட்களில் ஈடுபட்டவர்கள் எந்தவொரு காரணத்தினாலும் இறக்கும் அபாயத்தை 20-21% வரை குறைத்துள்ளனர். மேலும் வாரத்திற்கு 75-150 நிமிடங்கள் தீவிர வொர்கவுட்களை செய்தவர்கள் தங்கள் இறப்பு ஆபத்தை 19% குறைத்துள்ளனர். இருப்பினும் வாரத்திற்கு 600 நிமிடங்கள் மிதமான வொர்கவுட்களில் ஈடுபடுவது இன்னும் மிக குறைந்த இறப்பு அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

  அதாவது வாரத்திற்கு சுமார் 600 நிமிடங்கள் மிதமான உடல்செயல்பாடுகள் அல்லது வொர்கவுட்களில் ஈடுபடுவது எந்தவொரு காரணத்தினாலும் இறக்கும் அபாயத்தை 26% முதல் 31% வரை குறைப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விஷயத்தில் உடற்பயிற்சியின் மூலம் அதிக பலனை பெறுபவர்களாக வாரத்திற்கு குறைந்தபட்சம் 600 நிமிடங்கள் வொர்கவுட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

  தினமும் சுறுசுறுப்பாக இருப்பது சரியான திசையில் செல்வதற்கு முக்கியமான ஒரு படி. சைக்கிளிங், ரன்னிங், யோகா, கோல்ஃப் விளையாடுதல், நீச்சல் பயிற்சி, தரையைத் துடைப்பது போன்ற வீட்டு வேலைகள் உட்பட மற்ற தினசரி நடவடிக்கைகள் மிதமான ஏரோபிக் என்று கருதப்படுகின்றன.அதிகப்படியான தீவிர வொர்கவுட்களால் உடல்நல அபாயங்கள் எதுவும் இல்லை என்றாலும், கூடுதல் நன்மைகளும் இல்லை. பார்க்கவில்லை. சுருக்கமாக சொன்னால் நீண்ட நேரம் தீவிர வொர்கவுட்களை செய்வது ஏற்படுத்தும் தாக்கத்தை விட நீண்ட நேரம் செய்யப்படும் மிதமான வொர்கவுட்கள் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கம் அதிகம் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது.

  குறைவான உடல் செயல்பாடுகளுடன் ஒப்பிடும் போது அதிக உடல் செயல்பாடு இதய நோய்களை ஏற்படுத்தும் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது என்றாலும், திடீரென்று அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கடும் கார்டியோவாஸ்குலர் அபாயங்களுடன் தொடர்புடையது எனவே படிப்படியாக உடல்செயல்பாடுகள் அல்லது உடற்பயிற்சிகளை அதிகரிப்பதன் மூலம் அபாயங்களை குறைக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Exercise, Health, Tamil Nadu