முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கண்புரை பாதிப்பு... புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கண்புரை பாதிப்பு... புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கண்புரை பாதிப்பு

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கண்புரை பாதிப்பு

குழந்தைகளுக்கு கண்புரை பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கண்ணில் ஏற்படும் பாதிப்பான கண்புரை குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகியுள்ளது என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரத்தில் 6 குழந்தைகளுக்கு பிறவிலேயே இந்த கண்புரை பாதிப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதன் விளைவில் சுமார் 10 % குழந்தைகள் பார்வை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்குக் கண்புரை ஏற்படுவதற்குப் பல விதமான காரணங்கள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கண்புரை என்பது கண்களில் உள்ள லென்ஸ் நலிவு அடைந்து பார்வையை மங்கலாக்குவது. பிறவிலேயே குழந்தைகளுக்கு இது போன்று கண்புரை ஏற்படுவது தாய்வழி நோய்த்தொற்றுகள் அல்லது டவுன் சிண்ட்ரோம் போன்ற பிற முறையான முரண்பாடுகளின் காரணத்தினால் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமப் பகுதிகளை விட நகரப் புற குழந்தைகளே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகரிக்கும் பாதிப்புகளின் காரணத்தினால் தற்போது குழந்தைகளுக்கு வரும் கண்புரை பாதிப்பு உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டிய மருத்துவ பாதிப்பாக மாறியுள்ளது.

குழந்தைகளில் 15% பேர் கண் பார்வை இழக்கக் காரணமாக அமைவது பரம்பரை காரணம்தான் என்று கூறப்படுகிறது. அதிலும் 15% கண்புரையினால்தான் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரிய அளவிலான கண் மருத்துவமனைகளில், கண்புரை பாதிப்பில் குழந்தைகள் வருவது அதிகரிக்கிறது. குழந்தைகளின் கண்களில் வெள்ளை போன்ற புள்ளி தென்பட்டால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதுதான் அது கண்புரை என்றே தெரியவருகிறது.

குழந்தைகளுக்குக் கண்புரை வருவதற்கான காரணம் என்ன?

குழந்தைகளுக்கு வரும் கண்புரைகளை இரண்டு வகை உண்டு. பெரும்பாலான பாதிப்புகள் மரபணு ரீதியாகத் தான் வருகிறது. குடும்பத்தில் யாருக்காவது கண்புரை பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால் அது குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளது.

குழந்தையில் தாய் கர்ப்ப காலத்தில் கண்புரை தொற்றினால் பாதிக்கப்பட்டால் அது மரபு ரீதியில் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. மேலும், போதுமான அளவு சத்து கிடைக்காமல் போவது, மெடபாலிசம் குறைபாடு, ஜெஸ்டாடிசனல் சர்க்கரை வியாதி, அதிகமாக உடலில் மருந்து உபயோகப்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாக அமைக்கின்றானது.

குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது தாய் அதிகம் மருந்து எடுத்துக்கொள்வதினால் கூட பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். குறிப்பாகப் பிரசவக் காலத்தில் தாய் உடலில் செலுத்தும் ஸ்டெராய்டுகள் காரணமாகக் குழந்தைகளுக்குக் கண்புரை பாதிப்புகள் ஏற்படலாம்.

இதெல்லாம் இல்லாமல் குழந்தைகளுக்குக் கண்களில் ஏற்பட்ட காயத்தினால் கூட கண்புரை பாதிப்பு ஏற்படலாம்.

எப்படி குழந்தைகளுக்குக் கண்புரை உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது?

சிறு வயதிலேயே குழந்தைகளில் நடவடிக்கையைக் கண்காணிக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளின் கண்களை உற்று நோக்கிக் கவனிக்க வேண்டும். கண்களில் கருவில் வெள்ளை நிறத்தில் புள்ளி போல் தென்பட்டால், குழந்தைகள் பொருட்களைப் பார்ப்பதில் சிரமப்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

அறிகுறிகள் வேறுபடும். அதனால் கவனமாகக் கண்காணிப்பது அவசியமாகவுள்ளது. நிறங்களை வேறுபடுவதில் சிரமம், மங்கலாக உள்ளது என்று குழந்தைகள் தெரிவிப்பது, கண்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளது போன்றவற்றையும் உடனே கவனியுங்கள்.

தொடக்கத்திலேயே கண்டறிந்தால் கண் பார்வை இழப்பைத் தடுக்கலாம். கண்புரையை ஆரம்பக் காலத்தில் கண்டறிவது கடினமே. அதனால், குழந்தைகளுக்குக் கண் பார்வை பரிசோதனையை அவ்வப்போது செய்து வருவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Also Read : பருவகால தொற்றுகளை சமாளிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி..?

சிகிச்சை முறை என்ன?

குழந்தைகளுக்குக் கண்புரை பாதிப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை தான் செய்யப்படுகிறது. தொடக்கநிலை என்றால் குணப்படுவது எளிமையானதே என்று தான் தெரிவிக்கின்றனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்பு கண்ணாடி அல்லது லென்ஸ் மூலம் பார்வையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தைகளுக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் பல நெருக்கடிகள் இருக்கிறது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குச் சிறிய அளவில் தான் கண் இருக்கும். அதற்கு நவீனத் தொழில்நுட்பம் தேவை. அறுவை சிகிச்சையில் போது உபயோகப்படுத்தும் மயக்க மருந்து, கண் வீக்கம், குழந்தை கண் கசக்குவது போன்றவை அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கல்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Child, Eye care, Eye Problems