Home /News /lifestyle /

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா - இந்த 10 நிமிட வொர்கவுட் செய்யுங்க

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா - இந்த 10 நிமிட வொர்கவுட் செய்யுங்க

Work from Home

Work from Home

Workout | நீண்ட நேரம் உட்காருவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் சில உடல் அசைவுகளில் சில நிமிடங்கள் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் ருஜுதா. எளிய 10 நிமிட உடற்பயிற்சி குறித்து கூறி இருக்கிறார் இவர். இந்த வொர்க்அவுட்டானது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.

மேலும் படிக்கவும் ...
கோவிட்-19 தொற்று வெகுவாக குறைந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. எனினும் சில அலுவலக ஊழியர்கள் இன்னும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

வீட்டிலிருந்தே வேலை செய்வது வசதியாக இருந்தாலும் பலரின் உடலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுப்பற்றி கருத்து தெரிவித்து உள்ள பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அலுவலக வேலைகள் காரணமாக தொலைபேசிகள் மற்றும் லேப்டாப்களில் தொடர்ந்து பயன்படுத்தியபடியே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தலை மற்றும் கழுத்து பகுதிகள் நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அடிவயிற்றில் தொப்பை விழுவதோடு, மார்பு பகுதி சரிந்து முதுகு சுருண்டு போவதாக கூறுகிறார் ருஜுதா திவேகர்.

நீண்ட நேரம் உட்காருவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் சில உடல் அசைவுகளில் சில நிமிடங்கள் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் ருஜுதா. எளிய 10 நிமிட உடற்பயிற்சி குறித்து கூறி இருக்கிறார் இவர். இந்த வொர்க்அவுட்டானது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல் பாதிப்பை குறைக்க தினசரி 10 நிமிட உடற்பயிற்சி என்று கேப்ஷனிட்டு இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்து இருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர்.



 




View this post on Instagram





 

A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar)






இன்ஸ்டாவில் அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில் தானே அந்த எளிய உடற்பயிற்சிகளை செய்தும் காட்டி இருக்கிறார் ருஜுதா திவேகர்.

Also Read : மனித இரத்தத்திலும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக கண்டுபிடிப்பு – ஆய்வாளர்களின் அதிர்ச்சி ரிப்போர்ட்

* நாற்காலியில் உட்கார்ந்தபடியே கால்களை உயர்த்தி உயர்த்தி இறக்குதல் - 5 முறை

* உட்கார்ந்தபடியே கால்களை நேராக மேலே உயர்த்தி இறக்குதல் - 5 முறை

* ஷோல்டர் ஸ்ட்ரெச் - 5 கவுன்ட்ஸ்

* காஃப் ஸ்ட்ரெச் (இருபுறமும்) - 5 முறை

* ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச் - 5 முறை

* அப்பர் பாடி ட்விஸ்ட் - 5 கவுன்ட்ஸ்

* ஆர்ம் ஸ்ட்ரெச் - 5 கவுன்ட்ஸ்

* பேக் & நெக் ஸ்ட்ரெச் - 5 கவுன்ட்ஸ்

* பேக் & நெக் ஸ்ட்ரெச் 2 - 5 கவுன்ட்ஸ்

Also Read : உடல் எடையை குறைக்க உதவும் இந்த விதைகள் குறித்து தெரியுமா?

மேலே குறிப்பிட்டுள்ள எளிய உடற்பயிற்சிகளை ருஜுதா திவேகர் செய்து காட்டி இருக்கிறார். நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலைபார்ப்பவர் என்றால் ருஜுதா திவேகர் செய்து காட்டி இருப்பது போல இந்த ஈஸி வொர்கவுட்களை செய்து நல்ல பலன்களை பெறுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Work From Home, Workout

அடுத்த செய்தி