Home /News /lifestyle /

Tuberculosis : காசநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

Tuberculosis : காசநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

காசநோய்

காசநோய்

தொற்று உண்டாக்கும் எல்லா நுண்கிருமிகளும், ஈரமான, சில்லென்ற சூழலில் தான் பெருகும்

உயிர்கொல்லி நோய்களில் காசநோய் மிகவும் கடுமையான நோயாகும். பாக்டீரியாவால் உண்டாகும் டிபி உலகின் கால்வாசி மக்கள்தொகையை பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தகது. மருத்துவ உலகில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், காசநோய் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். டிபி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே.

TB உண்டாக்கும் பாக்டேரியா நம்முடைய நுரையீரலில் உள்ளது :

குழந்தை பருவத்தில், பலருக்கும் மைக்கோபாக்டீரியம் நோயால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். நுரையீரலில் தொற்று ஏற்படுவது, முதல் காச நோய் தொற்று என்று கூறப்படுகிறது. ஒரு சில குழந்தைகளில் பல ஆண்டுகளாக அப்படியே உடலில் அதாவது நுரையீரலில் தங்கி விடும். வளரும் போது, அல்லது வளர்ந்த பின்பு, இம்யூனிட்டி அமைப்பு பலவீனம் அடையும் போது, பாக்டீரியா மீண்டும் உயிர் பெற்று காசநோயை ஏற்படுத்தலாம்.

வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் காச நோயை எதிர்க்கலாம் :

பாக்டீரியா தொற்று என்பதால், உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தால், தொற்று ஏற்படாமல் எளிதாகத் தடுக்க முடியும். இதற்கு, ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த உணவுப்பழக்கம் உதவும்.



சூரிய ஒளியும், ஃபிரெஷ்ஷான காற்றும் காசநோய் பரவும் விகித்ததைக் குறைக்கும் :

தொற்று உண்டாக்கும் எல்லா நுண்கிருமிகளும், ஈரமான, சில்லென்ற சூழலில் தான் பெருகும், எளிதாகப் பரவும். எனவே, தினமும் போதிய சூரிய ஒளியும், தூய காற்றும் இருக்கும்படியான சூழலில் இருப்பது நோய்த்தொற்று பரவலைக் குறைக்கும்.

 

காசநோய் என்பது நுரையீரலை பாதிக்கும் நோய் :

காசநோய் தீவிரமான நோய், உடலில் பல பாகங்களையும், உறுப்புகளையும் பாதிக்கும். ஆனால், இது நுரையீலில் கடுமையான பாதிப்பை மற்றும் நுரையீரலை செயலிழக்கும் நோய் என்பதை மறந்து விடக்கூடாது.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 விஷயங்கள்..!

BGC தடுப்பூசி போட்டுக்கொள்வது டிபியில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்யாது :

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற டிபியில் இருந்து பாதுகாப்பு பெற, தீவிரமாவதைத் தடுக்க BGC தடுப்பூசி செலுத்தப்படும். ஆனால், இந்த தடுப்பூசி, காசநோய் ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியையும் கொடுக்காது.



காசநோய் என்பது முழுமையாக சரி செய்யக்கூடிய நோய் :

மிகவும் கடுமையான நோயாக இருந்தாலும், காசநோய்க்கு முறையான டயக்னோசிஸ் மற்றும் மருந்துகளை சரிவர எடுத்துக்கொண்டால், முழுவதுமாக குணப்படுத்த முடியும். நோய் எவ்வளவு தீவிரம் என்பதைப் பொறுத்து, சிகிச்சை சில வாரங்கள் முதல் குறைந்த பட்சம் ஆறு மாதம் வரை நீடிக்கலாம்.

Isoniazid, Rifampicin, Pyrazinamide, மற்றும் Ethambutol, ஆகியவை டிபிக்கு சிகிச்சையளிக்க வழங்கப்படும் பொதுவான மருந்துகள் ஆகும்.

பிறப்புறுப்பில் காசநோய் பெண்களில் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் :

பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய டிபி தொற்று, பெண்களிடையே கருவுறுதலில் சிக்கலில் ஏற்படுத்தி, நிரந்தரமான மலட்டுத்தன்மையை உண்டாக்கும். இது, வசதியற்ற, முறையான சுகாதாரம் அற்ற, பொருளாதார சூழலில் உள்ள பெண்களை அதிகம் பாதிக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Tuberculosis

அடுத்த செய்தி