CoronaVirus : கொரோனா 5-ல் ஒரு பங்கு வயதானவரிடையே பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் மோசமாக்கியுள்ளது : ஆய்வில் தகவல்!

மன அழுத்தம்

ஆரோக்கியமான முதுமை குறித்த தேசிய கருத்துக் கணிப்பின்படி, கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது நான்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வயதானவர்கள் அதிக சோர்வு மற்றும் கவலையுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

  • Share this:
கொரோனா வைரஸ் உலக நாடுகளை தாக்கத் தொடங்கியதில் இருந்து, 5ல் ஒரு பங்கு வயதானவர்களிடையே மன ஆரோக்கியமும், தூக்கமும் மோசமடைந்தது என்று ஒரு கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான முதுமை குறித்த தேசிய கருத்துக் கணிப்பின்படி, கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது நான்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வயதானவர்கள் அதிக சோர்வு மற்றும் கவலையுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் இன்ஸ்டிடியூட் பார் ஹெல்த்கேர் பாலிசி அண்ட் இன்னோவேஷன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 50 முதல் 80 வயது வரையிலான 2,000க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஜனவரி மாத இறுதியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 28 சதவீத வயதானவர்கள் அதிக மனச்சோர்வு அல்லது நம்பிக்கையற்ற உணர்வையும் , 34% பேர் பதற்றத்தையும், 44% பேர் மன அழுத்தத்தை உணர்ந்துள்ளனர். ஏறக்குறைய 64 சதவீதம் பேர் தூங்குவதில் சிக்கலை எதிர்கொண்டனர்.

இருப்பினும், இந்த வாக்கெடுப்பு பல வயதானவர்களிடையே நீண்டகால பின்னடைவை வெளிப்படுத்தியது. 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் மன ஆரோக்கியம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, உணவு மற்றும் தியானம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துள்ளதாக சுமார் 29 சதவீதம் பேர் தெரிவித்தனர்.



 

இதுகுறித்து பேசிய மிச்சிகன் மருத்துவத்தில் மனநல மருத்துவராக இருக்கும் ஜெரியாட்ரிக் லாரன் கெர்லாக் கூறியதாவது, "நாம் தொற்றுநோயின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும்போது, பெரும்பாலான வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம். அதேசமயம் இந்த நீண்டகால மன அழுத்தத்தின் நீடித்த விளைவுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான மனநல பரிசோதனை மற்றும் கவனிப்புக்கு போதுமான அணுகலையும் உறுதி செய்வது முக்கியம் என்று கூறியுள்ளார். குறைந்த வருமானம் மற்றும் மோசமான உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட மனநல சுகாதாரத்தை அணுக கடினமான நேரம் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது" என்று மேலும் கூறியுள்ளார்.

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்" நீண்ட காலத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட உலக சுகாதார மையம்!

கிட்டத்தட்ட 71 சதவீதம் பேர் எதிர்காலத்தில் ஒரு மனநல நிபுணரைப் பார்க்க தயங்கமாட்டார்கள் என்றும், 13 சதவீதம் பேர் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மனநல அக்கறை குறித்து தங்கள் முதன்மை பராமரிப்பு ஆலோசனை வழங்குநர்களுடன் பேசியதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு நேற்று ஒரே நாளில் 4,12,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் 3,980 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
Published by:Sivaranjani E
First published: