ஒரு சிடி ஸ்கேன் 300 எக்ஸ்ரேக்களுக்கு சமம் : எதிர்காலத்தில் புற்றுநோயை உண்டாக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை..!

சிடி ஸ்கேன்

குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறி அற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CT scan பரிந்துரை செய்வதில் எந்த பலனும் இல்லை.

 • Share this:
  குறைவான கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சிடி ஸ்கேன் பரிந்துரைப்பது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது என AIIMS இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்வாறு அதிகம் பயன்படுத்தும்போது அதன் ரேடியேஷன் கதிர்களின் தாக்கம் அதிகரித்து புற்றுநோயை உண்டாக்கும் என கூறியுள்ளார்.

  அதாவது குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறி அற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CT scan பரிந்துரை செய்வதில் எந்த பலனும் இல்லை. அவர்கள் சீக்கிரமே சிகிச்சைகளால் குணமடைந்துவிடுவார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் ஒரு CT scan , 300-400 மார்பக X-ray- க்களுக்கு சமம் என ரந்தீப் குலேரியா கூறுகிறார். அதோடு இது எதிர்காலத்தில் புற்றுநோயை உண்டாக்கும் என கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான சர்வதேச அணுசக்தி ஆணையம் நடத்திய ஆய்வை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுத்தால் எதிர்காலத்தில் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.  சாதாரண அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைப்பது தவறான பயன்பாட்டுக்கு சமம் எனக் கூறுயுள்ளார். “ பலர் சிடி ஸ்கேன் செய்கின்றனர். ஆனால் கொரோனா பாசிடிவ் கொண்டவர்களுக்கு, தீவிர அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே CT scan முக்கியமானது “ எனக் கூறியுள்ளார்.

  கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

  அதோடு அவர் காட்டிய தரவுகளில் இதுவரை எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன்களில் 30-40 சதவீதம் பேர் கொரோனா அறிகுறிகள் இல்லாத கோவிட் நோயாளிகள். அவர்கள் எந்த சிகிச்சையும் இல்லாமலேயே குணமடையக்கூடிய நோயாளிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் சாதாரண அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் வீட்டுத் தனிமையில் இருந்துகொண்டே குணமடையக் கூடியவர்கள் எனில் அவர்களுக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைப்பது தவறு எனக் கூறியுள்ளார்.  கூடுதலாக CRP, D-Dimer, LDH, Ferritin போன்ற பையோமார்க்கர்களும் சாதாரண அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார். இதுபோன்ற சிகிச்சைகள் சாதாரணமாக இருக்கும் நோயாளியைக் கூட பயமுறுத்தும் எனக் கூறியுள்ளார். இந்த பையோமார்க்குகள் உடலில் அழற்ச்சியை ஏற்படுத்தும். உடலில் ஏதேனும் பாதிப்பு , அழற்சிஇருந்தால் அதை இந்த பயோமார்கர்கள் அதிகரிக்கக் கூடும். நோயின் தீவிரத்தை அதிகரிக்கும். இதனால் தொற்றின் தீவிரத்தை துல்லியமாக கண்டறிய முடியாது எனக் கூறியுள்ளார்.

  ”பயோமார்க்கர்களை தேவையற்ற முறையில் நம்பியிருப்பது அதிகப்படியான சிகிச்சைக்கு வழிவகுக்கும். இது உடலை மோசமாக பாதிக்கும். "உங்களுக்கு மிதமான நோய் இருக்கும்போது மற்றும் உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயோமார்க்ஸ் செய்யுங்கள்" என்று குலேரியா பரிந்துரைத்துள்ளார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: