காதலின் மகத்துவம்! பெண்களின் பிரசவ வலி நீக்கும் மருந்து கணவனே: ஆய்வில் கண்டுபிடிப்பு

கணவன் மனைவியிடம் பேசாமல், கையைப் பிடிக்காமல், நேருக்கு நேர் கண்களை பார்த்தால் கூட பெண்களுக்கு வலி குறைவாதாக அல்லது வலியைத் தாங்கிக்கொள்வதாக ஆர்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காதலின் மகத்துவம்! பெண்களின் பிரசவ வலி நீக்கும் மருந்து கணவனே: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருத்துவமனை அறுவைசிகிச்சை அரங்கம்
  • News18
  • Last Updated: August 26, 2019, 9:52 PM IST
  • Share this:
பிரசவத்தின் போது கணவன் உடனிருந்தால் பெண்களுக்கு பிரசவ வலி குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்டறித்துள்ளனர்.

காதல், அன்புக்கு ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதை ஓர் ஆய்வு முடிவு நிரூபித்தும் இருக்கிறது. பிரசவத்தின் போது கணவன் உடனிருந்தால் பெண்களுக்கு பிரசவ வலி குறைவாக இருப்பதாக கண்டறித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ், மெடிக்கல் இன்ஃபர்மேடிக்ஸ் அண்ட் டெக்னாலஜி-ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் 48 ஜோடி கணவன் மனைவியை வைத்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கணவன் மனைவியின் கையை பிடிக்காமல், பேசாமல், கண்களை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, கணவன் அருகில் இருப்பதால் மனைவிக்கு பிரசவ வலி குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதாவது, கணவன் அருகில் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு வலி அதிகமாக இருந்துள்ளது.


இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கணவனை ஒரு மீட்டர் தொலைவில் அமரச் செய்துவிட்டு, மனைவியின் ஆள்காட்டி விரலை ஒரு இயந்திரத்தில் வைக்கச் சொல்லி, அந்த இயந்திரத்தை இயக்கி, கொஞ்சம் கொஞ்சமாக விரலை நசுக்கி வலி ஏற்படுத்தியுள்ளனர். வலி மிக அதிகமாக இருந்தால் உடனே இயந்திரம் நிறுத்தப்படும். இந்த ஆய்வில், கணவன் அருகில் இருந்த பெண்களுக்கு வலி குறைவாக இருந்துள்ளது அதாவது வலியை தாங்கிக் கொண்டனர். கணவன் அருகில் இல்லாத பெண்கள் சிறிது நேரத்திலேயே வலிப்பதாகக் கூறியுள்ளனர்.

கணவன் மனைவியிடம் பேசாமல், கையைப் பிடிக்காமல், நேருக்கு நேர் கண்களை பார்த்தால் கூட பெண்களுக்கு வலி குறைவாதாக அல்லது வலியைத் தாங்கிக்கொள்வதாக ஆர்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுதான் காதல், அன்பின் மகத்துவம்.

Loading...

 
First published: August 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...