பணியிடத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாது... அலுவலகக் கலாசாரத்தை பின்பற்றும் நபரா நீங்கள்..?

தொழில் போட்டியில் சாதித்த பல தலைவர்கள் இப்படியான அலுவலக் கலாசாரங்களை பின்பற்றாமல் தன் எண்ணம்போல் சகஜமாக இருந்ததாலேயே வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

பணியிடத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாது... அலுவலகக் கலாசாரத்தை பின்பற்றும் நபரா நீங்கள்..?
அலுவலகம்
  • News18
  • Last Updated: October 31, 2019, 10:03 PM IST
  • Share this:
முதல் முறையாக கல்லூரி முடித்து வேலைக்குச் செல்லும்போது யாரிடமும் அதிகம் பேசாதே.. சொந்த விஷயங்களை பகிராதே, அட்வாண்டேஜ் எடுத்துக்காதே என அறிவுரையால் பயமுறுத்துவார்கள். இல்லையெனில் சிலர் எந்த பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க சில விஷயங்களில் ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களை பார்க்கும் நமக்கும் இப்படித்தான் இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் தோன்றும். உண்மையில் அப்படி இருப்பதுதான் அலுவலகக் கலாசாரமா..?

தனிப்பட்ட விஷயங்களை தவிருங்கள் : சிலர் அலுவலக நேரத்தில் தனிப்பட்ட இமெயில், ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதளங்களை பார்ப்பது ஃபுரொஃபஷ்னலிசம் கிடையாது என்பார்கள்.  ஆனால் எதார்த்ததை யோசித்துப் பாருங்கள். உங்களுடைய தனிப்பட்ட பொழுதுபோக்கை முற்றிலும் எட்டு மணி நேரம் ஒதுக்குவது பொது வாழ்க்கை, நண்பர்களுடனான தொடர்பை துண்டிக்கும். அதேபோல் தொடர் பணி மனதளவில் ஆரோக்கியம் கிடையாது. எனவே அவ்வபோது இரண்டு நிமிடங்கள் தனிபட்ட பொழுதுபோக்கு விஷயங்களை செல்ஃபோனில் பார்ப்பது தவறல்ல. அது அலுவலகத்தில் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் இருக்கும்.
அலுவலகத்தில் பேசுவது அழகல்ல : நீங்கள் வேலை செய்யும் இடம் சிக்கல் நிறைந்தது. பிடிக்காது என்றாலும் பெஸ்டீ இல்லாமல் இருப்பது மிக மிக தவறு. அளவாக பேசிவிட்டு வேலையை மட்டும் பார்ப்பதும், நேரத்திற்கு அலுவலகம் வந்து வீடு திரும்புவதும் நிறுவனத்திற்கு நல்லது என்றாலும் உங்கள் மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது அல்ல. பணியிடத்தில் நண்பர்கள் இருப்பதும், நெருக்கமான நண்பரிடம் சொந்த பிரச்னை, அலுவலக பிரச்னைகளை பகிர்வது மன அழுத்தத்தை இலகுவாக்கும். இதை ஆய்வு ரீதியாகவும் நிரூபித்துள்ளனர். எனவே இன்றே கட்டுப்பாடுகளை விடுத்து மனம் விட்டு பேசுங்கள்.

நான் தான் சிறந்தவன் : கடந்த மாதம் நீங்கள் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக உங்களை நிறுவனம் பாராட்டுகிறது எனில் அந்த சலுகையை நீங்கள் மட்டும் அனுபவிப்பதும், ஆம் நான் தான் இதற்காக உழைத்தேன் என ஊதிய உயர்வு, ஃப்ரமோஷன் காரணங்களுக்காக சுயநலமாக சிந்திப்பது தவறு. அதற்கு மற்றவர்களின் உழைப்பும் , உதவியும் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது. எனவே அப்படி உதவி செய்தோரையும் நினைவு கூறுவது அவசியம். அது அலுவலக அரசியல் என்பதை விட உங்கள் மனிதம், நேர்மையை நிலைநாட்ட வேண்டும்.

பொறாமை கொள்ளும் குணம் : உங்களுடைய புராஜெக்டை மற்றவர்கள் கைகளுக்குச் செல்லக் கூடாது. அது உங்கள் கையில் இருப்பதால்தான் அனைவருக்கும் உங்கள் மீது பொறாமை. இல்லையெனில் அவர்கள் சிறப்பாக செய்துவிடுவார்கள். இல்லையெனில் நீ அப்படி யோசிக்காததாலும் சிறப்பாக செய்யாததாலும்தான் அவரிடம் மட்டுமே புராஜெக்ட் செல்கிறது என்று இப்படி பல விஷயங்கள் அலுவலகத்தில் உலா வரும்.

இவை எல்லாம் அலுவலகக் கலாசாரமாக காலாகாலமாக தொடர்ந்து வருகிறது. உண்மையில் இன்று தொழில் போட்டியில் சாதித்த பல தலைவர்கள் இப்படியான அலுவலக் கலாசாரங்களை பின்பற்றாமல் தன் எண்ணம்போல் சகஜமாக இருந்ததாலேயே வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். மாற்றங்கள் நல்லது என்பார்கள். மாற்றத்தை சிந்தியுங்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்