போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறீர்களா? உங்கள் உடலில் நீரிழப்பை உணர்த்தும் அறிகுறிகள்

மாதிரிப் படம்

நம் உடலை நலமாக வைத்திருப்பதற்கு போதுமான அளவு நீர் குடிக்க வேண்டிய மிகவும் அவசியமானது.

 • Share this:
  தண்ணீரை போலவே இன்றியமையாதது எதுவும் இல்லை என்றே கூறலாம். நம்மில் பெரும்பாலோர் தினமும் நமது உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்த மறந்துவிடுவார்கள். இதனால் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக கோடை காலத்தில் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கத் தவறும்போது, ​​அது நீரிழப்பை ஏற்படுத்தும். தாகமாக உணர்வது மட்டுமின்றி நீரிழப்பை பல்வேறு அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

  உலர்ந்த வாய் :

  வாய் உலர்ந்து காணப்படுவது நீரிழப்பின் முக்கிய அறிகுறியாகும். உமிழ்நீர் சுரப்பியானது நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரையாவது உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீர் சரியாக ஏற்படாத பட்சத்தில், உங்கள் உடலில் போதுமான நீர் இல்லை என உங்கள் உடல் உங்களை எச்சரிக்கிறது என அர்த்தம். வாய் உலர்ந்து விடுவதால், உமிழ்நீர் உற்பத்தியை சீர்குலைக்கும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

  சிறுநீர் குறைவு :

  நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது. இதனால் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நீரிழப்பு அறிகுறிகளில் ஒன்றாக உங்கள் சிறுநீரின் நிறம் இருண்ட நிறமாக மாறும். மேலும் மலச்சிக்கலும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் குடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும்.

  சருமத்தில் வறட்சி :

  உங்கள் சருமத்தை வைத்தே உங்கள் உடலில் இருக்கும் ஒரு சில பிரச்சனைகளை கண்டறிய முடியும். அந்த வகையில் நீரிழப்பையும் உங்கள் சருமத்தின் தன்மையை கொண்டே அறிய இயலும். நீரேற்றமாக இருந்தால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக ஒளிரும். உங்கள் உடலில் போதுமான தண்ணீர் இல்லாதபோது, ​​இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதால் உங்கள் சருமம் வறட்சியடைவதை நீங்கள் அனுபவிக்க முடியும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உங்கள் சரும பாதுகாப்பிற்கும் அவசியம் ஆகும்.

  குறைந்த இரத்த அழுத்தம் :

  நாள்பட்ட நீரிழப்பு பிளாஸ்மா இழப்புக்கு வழிவகுக்கும், இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் குறைந்த இரத்த அழுத்தம் பிரச்னை ஏற்படும். இதற்கான அறிகுறியாக சோர்வாக உணர்வீர்கள்.

  தலைவலி

  நீரிழப்பு இரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், முறையற்ற இரத்த ஓட்டம் மூளையை பாதிக்கும். இதனால் தலைவலி, பயம், லேசான மயக்கம் போன்ற உணர்வுகள் தோன்றும். இவை அனைத்தும் உங்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது என்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். இதனால் தண்ணீர், இளநீர், பழ ஜூஸ் ஆகிவற்றை அருந்தலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தசைப்பிடிப்பு மற்றும் வலிகள் :

  நீரிழப்பால் தோன்றும் மோசமான இரத்த ஓட்டம் உடலில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். உங்கள் உடலில் அசாதாரண வலியை நீங்கள் அனுபவிக்கத் தொடங்கினால், உங்களுக்குத் தேவையான முதல் மருந்தாக தண்ணீர் இருக்கலாம். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  மேற்கண்ட அறிகுறிகள் தோன்றினால் தினமும் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நீரேற்றத்தை பராமரிக்க, ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் அல்லது குறைந்தபட்சம் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க திரவங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்கள் அன்றாட உணவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  Published by:Karthick S
  First published: