முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எல்லோருக்கும் பிடித்தமான நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..? ஹார்வர்ட் ஆய்வறிக்கை சொல்வதை கேளுங்க..!

எல்லோருக்கும் பிடித்தமான நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..? ஹார்வர்ட் ஆய்வறிக்கை சொல்வதை கேளுங்க..!

எல்லோருக்கும் பிடித்தமான நபராக இருக்க டிப்ஸ்

எல்லோருக்கும் பிடித்தமான நபராக இருக்க டிப்ஸ்

அதிக கேள்விகளை கேட்டு மற்றவரை எரிச்சலடையச் செய்து கூடிய விதமாக நாம் நடந்து கொள்ள கூடாது. கேள்விகளைக் கேட்கும்போது முரட்டுத்தனமாகவும் அர்த்தமற்றதாகவும் கேட்க கூடாது

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எல்லோர் முன்னிலையிலும் நேர்மறையான நபராக எப்போதும் தன்னை காண்பிப்பது சாத்தியமற்ற ஒன்றாக பலருக்கும் இருக்கும். பொதுவாக ஒருவரை பற்றிய முதல் அபிப்பிராயம் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நீங்கள் ஆரம்பத்தில் எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த தாக்கத்தை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கலாம். இருப்பினும், எல்லோருக்கும் மிகவும் 'பிடிக்கக்கூடியதாக' நபராக இருப்பது உண்மையில் சாத்தியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது நீங்கள் பேசும் விதம் அல்லது உங்கள் தோற்றத்தை மட்டும் குறிப்பதல்ல.

இது உண்மையில் மேலும் பலவற்றை உள்ளடக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே போன்று இது மிகவும் எளிமையானதும் கூட! ஆம், நீங்கள் படித்தது சரிதான்! நீங்கள் கேள்விகள் கேட்கும் விதம் மக்கள் முன் மிகவும் விரும்பத்தக்க ஒருவராக இருக்க கூடிய ஒரு தந்திரமாக உள்ளது. ஒரு உரையாடலில் சரியான கேள்விகளைக் கேட்பது உங்களை சுவாரஸ்யமான நபராகவும், புரிந்துகொள்ளக் கூடிய நபராகவும், விரும்பத்தக்க ஒருவராகவும் தோற்றமளிக்கும் என்று சமீபத்திய ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவர் பேசும் விதம், கேட்கும் கேள்விகள், குறிப்பாக ஒரு தலைப்பைப் பின்தொடர்ந்து கேட்கும் கேள்விகள் முறை உங்களை மிகவும் பிடித்த ஒருவராக மாற்றும். மேலும், இந்த ஆய்வில் பேசுவதற்கு நன்றாக இருப்பதாகக் கருதும் நபர்களின் குழுவை ஆய்வு செய்வதும் அடங்கும்.

இது எப்படி வேலை செய்கிறது?

ஒரு தலைப்பைப் பின்தொடர்ந்து கேள்விகளைக் கேட்பது, நீங்கள் உள்ளார்ந்து கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இது போன்று கேட்பது நீண்டகால உறவுக்கான திறவுகோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, குறிப்பாக இரு நபர்களும் குறுக்கீடு இல்லாமல் ஒருவருக்கொருவர் கவனமாகக் கேட்க முடியும் தன்மை இதில் உள்ளது. இந்த செயல்பாடு தனது உணர்வுகளை தனது பார்ட்னருடன் குறுக்கிடாமல் வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

இது போன்று கேள்விகளைக் கேட்பது என்பது மற்றவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பதை அறிய நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் என்றும், உங்கள் ஆர்வத்தை நீங்கள் வெளிப்படுத்தும்போது, நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்றும் அர்த்தப்படுகிறது. அந்த நபர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதையும் இது வெளிக்காட்டும். இது மற்ற நபரைப் பற்றிய புரிதல், உணர்வுகளின் சரிபார்ப்பு மற்றும் உண்மையான அக்கறை ஆகியவற்றையும் குறிக்கிறது.

Also Read : அதிகம் உணர்ச்சி வசப்படும் நபரா நீங்கள்..? உங்களை கன்ட்ரோல் செய்யும் வழிகள்..!

இருப்பினும், சிலர் மற்ற நபரை கேள்விகளால் குடைந்து கொண்டே இருந்தால் அது நல்ல பழக்கமாக இருக்காது. ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் என்பது போதுமானதாக இருக்கும். ஆனால் அதிக கேள்விகளை கேட்டு மற்றவரை எரிச்சலடையச் செய்து கூடிய விதமாக நாம் நடந்து கொள்ள கூடாது. கேள்விகளைக் கேட்கும்போது முரட்டுத்தனமாகவும் அர்த்தமற்றதாகவும் கேட்க கூடாது. இது உங்களை விரும்பக்கூடிய வாய்ப்புகளை குறைக்கலாம். மேலும், உங்கள் கேள்விகள் மற்றவரைக் காட்டிலும் உங்களை நோக்கியதாக இருந்தால் அல்லது உங்களைப் பற்றி அதிகம் பெருமைப்பட்டு கொள்ள கூடியதாகவோ, அல்லது உங்கள் விருப்பப்படி உரையாடலில் ஆதிக்கம் செலுத்தினாலோ, மற்றவருக்கு 'பிடிக்கக்கூடிய வகை'யைச் சேர்ந்தவராக இருக்க மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

First published:

Tags: Lifestyle change, Relationship Tips