"காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே.. "காதல் வாகனமாக வலம்வரும் பேருந்தின் ப்ளே லிஸ்டில் காதல் வைப்யுடன் காலையிலே ரொமாண்டிக் பாடல்கள் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. எருக்கன் செடியோரம் இறுக்கி புடிச்ச ஏன் மாமா என இம்சிக்கும் உள்ளூர் டவுன்பஸ்சில் கூட "என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்..!" என மெலடிகள் மெட்டெடுக்கிறது.
உலகமே இன்று காதலர் தினத்தை கொண்டாடுகிறது. இன்றைய தினம் மட்டுமல்ல பிப்ரவரியே காதலர் மாதமாகிவிட்டது. பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்த கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர் காதலர்கள். ரோஸ் டே, பிரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே என லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நமக்கு பிடித்தமான ஒருவரின் மீது ஏற்படக்கூடிய பிணைப்புதான் காதல். காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர்வுகளாலே காதலை நுகர முடியும். அன்பின் பரிமாற்றமே காதலின் புனிதம். வியாபார சந்தையில் விலைக்கொடுத்து வாங்க காதல் விற்பனை பொருள் இல்லை. வணிகத்துக்கு அப்பாற்பட்ட விந்தைதான் காதல். நெருக்கமான இரு மனதுக்கு ஏற்படும் யுத்தம்தான் காதல். காதலுக்காக எழுந்த யுத்தங்கள் வரலாற்றின் பக்கங்களில் உள்ளது.
காதலர்களுக்கு இன்று தான் ஸ்பெஷல் டே காதலர் தினம். இதயம் முரளி போல் காதலை உள்ளுக்குள்ளே வைத்து உருகுபவர்களும் இருக்கிறார்கள். "ஐயம் இன் லவ் வித் யூ.." என வேட்டையாடு விளையாடு கமல் ரகத்தில் அதிரடிக்கு காதலர்களும் இருக்கார்கள். தயங்கி தயங்கி காதலை வெளிப்படுத்துவர்களாக இருந்தாலும் தடாலடியாக காதலை சொல்பவர்களாக இருந்தாலும் தடுமாறும் ஒரு நொடி காதலி/ காதலன் கண்களை நேருக்கு நேர் எதிர்க்கொண்டு காதலை சொல்லும் அந்தத் தருணம் எல்லாம் வேற லெவல் த்ரில். தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவனின் மனநிலைதான் இருக்கும்.
Also Read: காதலர் தினம் 2023: நீங்கள் சிங்கிளா... பிப்ரவரி 14-ல் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி.?
நீ எனக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணுன தெரியுமா..! அசடு வழியாத.. என காதலிப்பவர்களும் காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு அந்த பசுமையான நினைவுகளை இந்த நாளில் அசைப்போட்டு கொண்டிருப்பீர்கள். நீ வா மாப்ளா நான் இருக்கேன் என தைரியும் கொடுத்த நண்பன் காதலியுடன் அப்பா வருவதை கண்டு. அவன் என் ஃப்ரண்டே இல்லங்க.. அவன் யாருனே தெரியுதா.. என யாரடி நீ மோகினி கருணாஸ் ரேஞ்சில் கலட்டிவிட்டு போன உங்க நண்பன் ஞாபகத்துக்கு வந்து போறாரா..
காதலிக்கிறத விட அந்த காதலை காதலன்/ காதலியிடம் வெளிப்படுத்த தைரியம் வேணும்.. சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை விட சொல்லாமல் கடந்துபோன காதல்கள்தான் அதிகம். பூமர்களாக பார்க்கப்படும் பலருக்கும் உள்ளே ஒரு பசுமையான காதல் நிழலாடிக்கொண்டிருக்கும். சொல்லாமல் கடந்துபோன காதலின் சாட்சியாக பல 90-ஸ் கிட்ஸ்கள் முரட்டு சிங்கிள் அவதாரத்தை முகத்துக்கு பூசி உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். காதலை வெளிப்படுத்துவது எல்லாம் வேற லெவல் த்ரில்.. காதலை மனசுக்குள் பூட்டிவைத்து கடந்த போகாமல்.. உங்கள் காதலை சிறகடித்து பறக்கவிடுங்கள்.. தைரியமாக உங்க காதலை சொல்லுங்கள்… உங்கள் அன்பை வெளிப்படுத்துங்க பாஸ்.. Happy Valentines Day..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lovers day, Tamil News, Valentine's day, Valentine's Gifts, Valentine's Week