முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Whatsapp-இல் வித்தியாசமாக புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டுமா? விதவிதமான Stickers, GIF-களை பகிருங்கள்..

Whatsapp-இல் வித்தியாசமாக புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டுமா? விதவிதமான Stickers, GIF-களை பகிருங்கள்..

மாதிரி படம்

மாதிரி படம்

நலம் விரும்பிகளை அசத்துவதற்கு ஆன்லைனில் தேடி புதிய ஸ்டிக்கர்ஸை பயன்படுத்த வேண்டும் அல்லது பிளே ஸ்டோரில் இருந்து புதிய ஆப்களை டவுன்லோடு செய்து அதில் இருக்கும் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்தலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருப்பதால், குடும்பத்தினரையும், நண்பர்களையும் வாட்ஸ் ஆப்பில் வாழ்த்துவதற்கு வித்தியாசமான Stickers மற்றும் GIFs-களை பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். வாட்ஸ்ஆப்பில் ( Whats App) சில குறிப்பிட்ட ஸ்டிக்கர்ஸ் மற்றும் GIFs மட்டுமே இருப்பதால், நலம் விரும்பிகளை அசத்துவதற்கு ஆன்லைனில் தேடி புதிய ஸ்டிக்கர்ஸை பயன்படுத்த வேண்டும் அல்லது பிளே ஸ்டோரில் இருந்து புதிய ஆப்களை டவுன்லோடு செய்து அதில் இருக்கும் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்தலாம்.

அந்தவகையில் புதிய ஆப்களை தேடும் பலரில் நீங்களும் ஒருவர் என்றால், கவலையே படாதீங்க! உங்களுக்காக பிளேஸ்டோரில் இருக்கும் பல App-களை டவுன்லோடு செய்து, அதனை பயன்படுத்தி Best APP ஒன்றை உங்களுக்காக தேர்வு செய்துள்ளோம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Whats App-ல் புத்தாண்டு 2021 ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

STEP1: கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google play store) சென்று Search option -ல் வாட்ஸ்அப்பிற்கான புத்தாண்டு 2021 ஸ்டிக்கர்களை (Stickers) தேடுங்கள்

STEP 2: App Store பல புத்தாண்டு ஸ்டிக்கர் App-களை காண்பிக்கும். அதில், உங்கள் விருப்பப்படி உங்களுக்கு பிடித்த App -களை தேர்ந்தெடுக்கலாம். நாங்கள் “Happy New Year 2021 Stickers” APP -ஐ பதிவிறக்கம் செய்தோம். நாங்கள் தரவிறக்கம் செய்த செயலியும், நீங்கள் தரவிறக்கும் செயலியும் ஒன்றுதான் என்பதை சரிபார்க்க மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் ஐகான பார்த்துக்கொள்ளுங்கள். இந்த செயலியை டவுன்லோடு செய்தபிறகு, அதில் 6 வகையான புத்தாண்டு Stickers Pack இருக்கும்.

STEP 3: நீங்கள் ஒவ்வொரு ஸ்டிக்கர் பேக்கையும் திறந்து, எது மிகவும் அழகாக இருக்கிறது என்பதை பார்க்கலாம். அங்கு உங்களுக்கு பிடிக்கும் ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப்பில் சேர்க்க, ஸ்டிக்கர்கள் tap-ல் வலது மூலையில் அமைந்துள்ள ‘+’ Option -ஐ தட்ட வேண்டும்.

STEP4: அப்போது வாட்ஸ் ஆப் திரையில் தோன்றும் Notification -ல் “XXXXX ஐ வாட்ஸ்அப்பில் சேர்க்க விரும்புகிறீர்களா” என்று பாப் அப் (Pop UP) செய்யும். நீங்கள் ‘ADD’ Button -ஐ அழுத்த வேண்டும். உடனடியாக அனைத்து புத்தாண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களும் உங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியே செல்ல தடையா? கவலையை விடுங்க.. வீட்டிலேயே கொண்டாட சில டிப்ஸ்..

உங்கள் வாட்ஸ் ஆப்பில் நீங்கள் பதவிறக்கம் செய்த ஸ்டிக்கர் சேர்ந்துவிட்டதா? என்பதை சரிபார்க்க, நீங்கள் ஸ்டிக்கர்ஸ் அனுப்ப விரும்பும் நபரின் meaasge பக்கத்தை திறக்க வேண்டும். அங்கு, தட்டச்சுப் பட்டியில் அமைந்துள்ள Smiley icon- ஐ தட்ட வேண்டும். பின்னர் ஸ்டிக்கர்கள் பிரிவுக்குச் செல்லவும். அங்கே, புதிதாக சேர்க்கப்பட்ட புத்தாண்டு 2021 ஸ்டிக்கர்களை நீங்கள் காண்பீர்கள்.

Happy new year 2021

New Year 2021 Gif -களை அனுப்புவது எப்படி?

புத்தாண்டு 2021 வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களில் திருப்தி அடையவில்லை என்றால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நீங்கள் சில வேடிக்கையான அல்லது அழகான GIF-களை அனுப்பலாம். அதற்கு நீங்கள் Giphy.com வலைத்தளத்துக்கு சென்றால், அங்கு நீங்கள் நிறைய விதவிதமான புத்தாண்டு GIF-களை பார்க்கலாம். அதில் உங்களுக்கு விருப்பமான Gif -ஐ தேர்தெடுத்து, Copy செய்ய வேண்டும். நீங்கள் Copy செய்தவுடன், அதனை அனுப்ப விரும்ப நபரின் Chat Box -ஐ திறந்து அனுப்ப, HTML5 Video லிங்கை Paste செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் விரும்பும் நபர்களுக்கு அந்த GIF சென்று சேரும்.

First published:

Tags: New Year 2021, New Year Celebration