2020-ல் நடந்த நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?

2020-ல் நடந்த நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?

மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க்  எடுக்கும் ஒவ்வொருவரும் ஹீரோ தான் என்பது விளங்கியது. 

மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க்  எடுக்கும் ஒவ்வொருவரும் ஹீரோ தான் என்பது விளங்கியது. 

 • Share this:
  கோவிட்-19 தொற்று ஆதிக்கம் செலுத்திய 2020-ம் ஆண்டில், வெளிவந்த ஒரு உண்மை என்னவென்றால், மக்கள் தங்கள் வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இப்படியாக நடந்த சில நல்ல விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

  ஹீரோக்கள் மறுவரையறை

  நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரங்களுமே சாதாரண மனிதனுக்கு ஹீரோயிஸத்தை காட்டுவதாக வரையறை இருந்தது.  ஆனால் இந்த ஆண்டு, அது மாறியது. கோவிட்-19 லாக்டவுன் போது சுகாதார வல்லுநர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள் மக்களுக்காக அயராது உழைத்தனர். மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க்  எடுக்கும் ஒவ்வொருவரும் ஹீரோ தான் என்பது விளங்கியது.

  குணமடைந்த சுற்றுச்சூழல் 

  சுற்றுச்சூழலுக்கும் விலங்குகளுக்கும் இது ஒரு நல்ல ஆண்டாக இருந்தது. சாலைகளில் குறைந்த வாகனங்கள் மற்றும் மரங்களை வெட்டுவது நிறுத்தப்பட்டதால், சூழல் மிக அழகான வழிகளில் குணமடைந்தது. மாசு குறைந்ததால், தொலைதூர இடத்தில் நின்றவர்களைக் கூட தெளிவாகக் காண முடிந்தது. கடினமான  லாக்டவுனில் நடந்த முக்கிய நல்ல விஷயம் இது.

  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைதல்

  ஒரே வீட்டில் வசித்தாலும், பலர் தங்கள் சொந்த வாழ்க்கையின் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டார்கள். இதனால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பெரிதளவில் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுனால் அனைவரின் மன கதவுகள் திறந்து, தங்கள் அன்பை மீண்டும் புதுப்பிக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. விலைமதிப்பற்ற நினைவுகளை உருவாக்க 2020 ஒரு காரணம்  என்றால் அது மிகையல்ல.

  மனநலம் 

  மனநலத்தைப் பற்றிய உரையாடல்  சில ஆண்டுகளாக பேசு பொருளாக மாறியிருந்தாலும், 2020-ம் ஆண்டில் அது முன்னுரிமையாக மாறியது. கடினமான காலங்களில் மன அழுத்தத்தை கையாளும் விதம் குறித்து நிறைய பேசப்பட்டது. அதோடு பேச யாரும் இல்லாமல் தனிமையில் வாடுபவர்களுக்கு உதவ பலர் முன்வந்தனர். கொரோனா தொற்றுநோய் அமைதியாக துன்பப்படுபவர்களை அடையாளம் காட்டியது.
  Published by:Shalini C
  First published: