• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக பெண் குழந்தைகள் தினம் 2021 .. பெண் குழந்தைகளை இப்படி வாழ்த்து சொல்லுங்கள்..

உலக பெண் குழந்தைகள் தினம் 2021 .. பெண் குழந்தைகளை இப்படி வாழ்த்து சொல்லுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும்.

  • Share this:
பெண் குழந்தைகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான சமூகமாற்றத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாயந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும்.

பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள், தோழிகள் உள்ளிட்டோருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

* ஒரு பெண் குழந்தை மகிழ்ச்சியாக வாழ இந்த உலகம் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாறட்டும். சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். ”

* உன் சிரிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. துன்பங்களை சமாளிப்பதற்காக நீ எடுக்கும் முயற்சிகள் என்னை பெருமைப்படுத்துகின்றன. நம்பமுடியாத மகளாக இருப்பதற்கு நன்றி.

* உலகெங்கும் இருக்கும் இளம்பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும், அவர்களின் குரல்கள் அதிகாரப்படுத்தப்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டுள்ள சர்வதேச பெண் குழந்தைகளின் நாளில், அவர்களின் குரல்களுக்கு உலகம் செவிமடுக்கட்டும்.

* குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது, எங்கள் வாழ்வில் பெண்ணாக வந்து, எங்களை மகிழ்ச்சிப்படுத்தியவள் நீ. உன்னை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம். எங்கள் வாழ்க்கையை முழுமையாக்கிய என் அன்பு மகளே உனக்கு நன்றி

* கனவுகளுடன் பயணிக்கும் சிறுமிகள், வாழ்வில் வலிமையான பெண்களாக உருவெடுப்பார்கள். சர்வதேச பெண் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்

* பாதுகாப்பான மற்றும் முற்போக்கான சூழலில் பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என அனைவரும் கனவு காண்கிறோம். அந்த நாட்கள் விரைவில் அமையட்டும். சர்வதேச பெண் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்

இந்த ஆண்டின் தீம் :

சர்வதேச பெண் குழந்தைகள் நாளுக்காக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீம் ‘டிஜிட்டல் தலைமுறையே, எங்கள் தலைமுறை’ என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மகள்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்பதால், எந்த சூழலிலும் அவர்களை இழிவுபடுத்தக்கூடாது. தங்களின் பெண் குழந்தைக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு படித்த பெண், முழு குடும்பத்தையும் பட்டதாரிகளாக மாற்றும் சக்தி உள்ளது என்பதால், அவர்களுக்கான முழு சுதந்திரத்தையும் கொடுக்க பெற்றோர் முன்வர வேண்டும். இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான சமூக முட்டுக்கட்டைகள் குறித்து இந்நாளில் வெளிப்படையாக அனைத்து தளங்களிலும் பேசப்பட வேண்டும். அப்படியான முன்னெடுப்புகள், இந்நாளை முழுமையடையச் செய்யும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: