Happy Akshaya Tritiya 2019: அட்சய திருதியை அன்று தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ?

தங்கம் தேவைக்கு உதவும் நண்பன்.

Sivaranjani E | news18
Updated: May 7, 2019, 8:23 PM IST
Happy Akshaya Tritiya 2019: அட்சய திருதியை அன்று தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ?
அட்சயத் திருதி
Sivaranjani E | news18
Updated: May 7, 2019, 8:23 PM IST
இந்தியர்களை பொருத்தமட்டில் தங்கத்தின் மதிப்பு என்றுமே ஏறுமுகம்தான். 

சேமிப்பு என்று வந்தாலே தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள் அல்லது சேமித்த பணத்தை தங்கம் வாங்கி முதலீடு செய்வார்கள். இப்படித் தங்கத்தை வெறும் தங்கமாகக் கருதாமல், அது வீட்டில் இருப்பதால் லக்‌ஷ்மி குடியேறியது போன்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

நம்பிக்கை என்பதைத் தாண்டி தங்கத்தில் முதலீடு செய்வது பல வகைகளில் நன்மை மற்றும் சேமிப்பைக் கொடுக்கும்.


ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அது உடல் ரீதியான நோயைத் தடுக்கவும், உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அந்த வகையில் தங்கம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், பதட்டம் நீங்கி மன தைரியம், தன்னம்பிக்கை, உள்ளுக்குள் பாசிடிவ் எனர்ஜி உருவாகும் எனக் கூறப்படுகிறது.



தங்கத்தில் முதலீடு செய்தால் அதை எளிதில் விற்பனை செய்துவிடலாம். அதற்காகப் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. அருகில் இருக்கும் நகைக்கடைக்கு எடுத்துச் சென்றாலே வாங்கிக் கொள்வார்கள். அதை எளிதில் உருக்கி வேறொரு நகையாகவும் மாற்றிக் கொள்ளலாம். எவ்வளவு தங்கம் இருந்தாலும் அதை விற்று நம் தேவைக்குப் பணமாக்கிக் கொள்ளலாம்.

Loading...

விற்பனைக்கு மட்டுமல்ல தங்கம் தேவைக்கு உதவும் நண்பன். குறிப்பாக மிடில் கிளாஸிற்கு தங்கம் தான் பெரும் முதலீடு. ஏனெனில் அதுதான் தங்களின் தேவைக்கு உடனே உதவக் கூடியது. வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களில் தங்கத்தைக் குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். பணம் கிடைத்தபின் மீண்டும் அதை மீட்டு அணிந்து கொள்ளலாம்.

இலட்சக் கணக்கான பணத்தை எளிதில் முதலீடு செய்யத் தங்கமே சிறந்த வழி. மற்ற சொத்துகளில் முதலீடு செய்யவேண்டுமெனில் அதற்காகப் பல ஆவணங்கள் வேண்டும். அந்த ஆவணங்களை வாங்கப் பல இலட்சம் செலவு செய்ய வேண்டும். அதைச் சரியானது தானா என ஆராய வேண்டும். தங்கம் வாங்க அப்படி இல்லை எளிதில் வரியை மட்டும் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.



தங்கம் இத்தனை விலையுயர்ந்த மதிப்பாகக் கருதப்படுவதற்குக் காரணம் அதன் உருவாக்கத்தில் உள்ள பின்னணி தான். தங்கம் வெட்டி எடுக்கப் பல பொருட் செலவுகள், மனித உழைப்பு செலவாகிறது. சுரங்கத்தில் வேலை செய்து தங்கம் வெட்டி எடுப்பது என்பது அத்தனை சுலபமான காரியமில்லை. எனவேதான் அதன் மதிப்பு எப்போதும் அதிகரிக்கிறது.

நீங்கள் தங்கம் வாங்க முடிவு செய்துவிட்டால் , அதை நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்துங்கள். குறுகிய காலத்தில் அதை விற்பனை செய்தால் அதன் பலன் இருக்காது. அதேபோல் தங்கத்தின் விலை மதிப்பு சந்தையைப் பொறுத்து கடும் வீழ்ச்சியையும் சந்திக்கும். இருப்பினும் அது திரும்பும்போது அதைவிட இரு மடங்காக அதன் விலை உயரும் என்பதே உண்மை. அந்த சமயத்தில் தங்கத்தை விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

இதையும் படிக்க :

தியானம் செய்வதன் நன்மைகள் பற்றித் தெரியுமா ?

30 வயதைக் கடந்தும் இளமையைத் தக்கவைக்க உதவும் சமையலறை ரகசியம்!




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...