நம்முடைய வேலை மற்றும் உற்பத்தித் திறனைத் திறம்பட வைத்திருப்பதற்கு நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் முக்கிய காரணமாகின்றன. ஆனால் நமக்கே தெரியாமல் நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் நம்முடைய உற்பத்தித்திறனைச் சிதைக்கின்றன.
ஏனென்றால் சில பழக்கங்கள் நம்மை மெதுவாக்கும், படைப்பாற்றல் மற்றும் துல்லியத்தைக் குறைக்கின்றன. அதே போல நாம் காலையில் தூங்கி எழுந்ததும் பின்பற்றும் காலை பழக்கங்கள் நம் நாளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றன. உங்களின் காலை பழக்கங்கள் ஆரோக்கியமானவையாக இருந்தால் உங்கள் நாள் சிறப்பானதாக இருக்கும் மற்றும் நீங்கள் திட்டமிட்ட இலக்குகளை முன்னதாக அடைய உதவும். ஒரு சில பழக்கங்கள் நாளை சிறப்பாக எடுத்துச் செல்வதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் சிறந்த உற்பத்தித் திறனை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் இலக்குகளை அடைய மற்றும் பயனுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டிருக்க ஒருவர் தவிர்க்க வேண்டிய பழக்கங்களின் பட்டியல் இதோ.
தூங்கி எழுந்தவுடன் மொபைல்:
நம்மில் பலர் மொபைலை கையில் எந்நேரமும் வைத்துக் கொண்டே திரிகிறோம், தூங்கும் போதும் கூட. மொபைலை பயன்படுத்துவதால் இரவு லேட்டாக தூங்கச் செல்லும் நாம், காலையில் எழும்போதும் கூட மொபைலை தான் முதலில் தேடுகிறோம். எழுந்ததும் பல மணிநேரம் மொபைலை ஸ்க்ரோலிங் செய்வது நம் நேரத்தை வீணடிக்கிறது. நாளை தாமதமாக்குகிறது. எனவே, எழுந்தவுடன் ஃபோன்களைத் தவிர்ப்பது நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கச் சிறந்த வழியாகும். காலை தியானம் மற்றும் லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உற்சாகமாக நாளை துவக்கலாம்.
நீங்கள் முழுமையாக விழிக்க உங்களை அனுமதிக்காமல் விடுவது:
காலை நேரத்தில் தூங்கி எழுந்து கண் விழித்தாலும் நமது உடல் முழுமையாக விழிக்கக் குறைந்தது 30 நிமிடங்களாவது தேவைப்படும். காலை எழுந்தவுடன் உடனடியாக வேலைகளைச் செய்யத் துவக்கினால் குறைந்த ஆற்றலுடன் நாளை தொடங்கும் கணக்காகிவிடும். எனவே எழுந்த பிறகு உங்கள் நாளை துவக்கும் முன், நன்றாக ரிலாக்ஸ் செய்வது முழுமையாக விழித்திருக்க உங்களுக்கு நேரம் கொடுப்பதோடு, உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், முடிவெடுப்பதிலும் உங்களுக்கு உதவும்.
Also Read : வயிறு கோளாறு ஏற்படும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?
அலாரத்தை ஸ்னூஸ் செய்வது:
அலாரம் வைத்தாலும் கூட அது அடித்தவுடன் எழுந்திருப்பது வெகு சிலரே. பெரும்பாலும் snooze பட்டனை பிரஸ் செய்து எழுந்திருக்கும் நேரத்தைத் தாமதமாக்கி கொண்டே செல்வார்கள். எனவே முதல் முறை அலாரம் அடிக்கும் போதே எழுந்திருப்பது உங்கள் காலை நேரத்தைத் திட்டமிடவும், நாளில் திட்டமிட்டுள்ள இலக்குகளை அடையவும் இது உதவும்.
காலை உணவைத் தவிர்ப்பது:
காலை உணவு என்பது ஒரு நாளை சிறப்பாக மற்றும் ஆற்றலுடன் தொடங்க உதவும் முக்கிய விஷயம். ஆனால் அவசர அவசரமாக வேலை அல்லது பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பலரும் காலையில் சாப்பிடுவதில்லை. ஒரு நாளை கடக்க உடலுக்குத் தேவையான சத்து இதன் மூலம் சரியாகக் கிடைக்காமல் போகிறது. எப்போதுமே காலை உணவு ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் ஆகியவற்றின் கலவையாக இருக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
படுக்கையைச் சரி செய்யாமல் எழுவது:
தூங்கி எழுந்ததும் உங்கள் படுக்கையைச் சரி செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது பெரிய விஷயமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் படுக்கை அல்லது போர்வையை எழுந்தவுடன் நீங்கள் சரி செய்வது உங்கள் மனதைச் சீராக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டதாக உணர உதவும். நாளை உற்சாகமாகத் தொடங்கவும் இந்த பழக்கம் உங்களுக்கு உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bad Habits, Healthy Life, Healthy Lifestyle