புல்வாமா எதிரொலி புடவையில் பிரதிபலிப்பு: வீரர்களுக்குச் சமர்பணம்!

புடவையின் விற்பனை இலாபத்தை பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முடிவு.

Web Desk | news18
Updated: February 22, 2019, 6:42 PM IST
புல்வாமா எதிரொலி புடவையில் பிரதிபலிப்பு: வீரர்களுக்குச் சமர்பணம்!
புல்வாமா புடவை
Web Desk | news18
Updated: February 22, 2019, 6:42 PM IST
கடந்த வாரம் நடந்த புல்வாமா தாக்குதல் சோகம் இன்னும் நீங்காத நிலையில்; வீரர்கள் இந்தியாவை பாதுகாப்பது போன்ற அச்சுப் புடவையை குஜராத் புடவை உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீர் பகுதியின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சோகத்தை தாங்க முடியாத மக்கள் ஆங்காங்கே  அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் குஜராத் புடவை உற்பத்திக்கு பிரதான இடமான சூரத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்தியவை பாதுகாப்பது போன்ற ஓவியங்களை புடவையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். சூரத்தின் அன்னபூர்னா இண்டஸ்ட்ரீட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்தான் இந்தப் புடவையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் புடவையின் விற்பனை இலாபத்தை பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
புடவை முழுவதும் வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடியும், புகை மண்டலமாகவும், வீரர்கள் ஓடுவது போன்றும் பல வகையான ஓவியங்கள் கொண்ட கலவையாக அந்தப் புடவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மனிஷ், “நம் இந்திய வீரர்களின் வலிமையையும், அவர்களின் திடமான பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களை அச்சிட்டுள்ளோம். நாங்கள் நினைத்ததைப் போலவே புடவையும் அழகாக அச்சிட்டு வெளியாகி இருக்கிறது. இதன் பிரதிபளிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இந்தப் புடவையின் விற்பனை இலாபத்தை வீரர்களின் குடும்பங்களுக்கு பிரித்தளிக்க முடிவு செய்துள்ளோம்“ என்று மனீஷ் கூறினார்.
First published: February 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...