2021ம் ஆண்டு வசந்த காலத்தை Doodles மூலம் வரவேற்கும் கூகுள்...!

2021ம் ஆண்டு வசந்த காலத்தை Doodles மூலம் வரவேற்கும் கூகுள்...!

வசந்த காலத்தை Doodles மூலம் வரவேற்கும் கூகுள்

பூமியானது வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் என பிரிக்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பூமியின் வட அரைக்கோள பகுதியில் (NORTHERN HEMISPHERE) வசந்தகாலம் தொடங்கியதை வரவேற்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

பூமத்திய ரேகையின் அடிப்படையில் பூமியானது வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் என பிரிக்கப்படுகிறது. இதில் வடக்கு அரைக்கோள பகுதியில் இந்தியா, சீனா, கனடா, அமெரிக்கா, பெல்ஜியம், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை வருகின்றன. இந்த பகுதிகளில் வழக்கமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வசந்தகாலம் இருக்கும். அப்போது, செடி, கொடிகள் மலர்ந்து பச்சைப்பசேல் என மகிழ்ச்சியாக காட்சியளிக்கும்.

வட அரைக்கோளப் பகுதியின் நடப்பாண்டுக்கான வசந்தகால சீசன் மார்ச் 20ம் தேதி தொடங்கியுள்ளது. இதனை கூகுகள் டூடுல் மூலம் வரவேற்றுள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் , வசந்த காலத்தின் அடையாளமாக இருக்கும் பூத்திருக்கும் பூக்கள் மற்றும் அதனை சுற்றி வட்டமிடும் தேனீக்கள் இடம் பெற்றுள்ளளன. மார்ச் 20ம் தேதி தொடங்கும் வசந்த காலம் ஜூன் 21ம் தேதி வரை இருக்கும். இன்றைய நாளில் உலகம் முழுவதும் பகல் இரவானது தலா 12 மணி நேரம் என்ற அடிப்படையில் சரியாக இருக்கும். வசந்தகாலத்தின் தொடக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

வசந்தகாலத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது என்றாலும், இந்த ஆண்டு வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். வட அரைக்கோளத்தில் பொதுவாக மார்ச் 20 -21ம் தேதிகளில் இரவு, பகல் சரிவிகிதத்தில் இருப்பதுபோல், தென் அரைக்கோளத்தில் செம்டம்பர் 22 -23ம் தேதியன்று இருக்கும். அப்போது அங்கு வசந்தகாலம் தொடங்கும். அறிவியல் ரீதியாக இரவு பகல் ஒரே மாதிரியாக இருக்கும் நாளில் கோடை காலத்தில் இருந்து வசந்தகாலம் பிறப்பதை அடையாளமாக கூறுகின்றனர்.

Also read... ஐபோன் 12, மேக்புக் ஏர், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டோரில் அட்டகாசமான தள்ளுபடி!

தற்போது தென் அரைக்கோளத்தில் இலையுதிர்காலம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வசந்தகாலம் தொடங்கும்போது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் மலர் கண்காட்சிகள் களைகட்டும். அப்போது, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், அபூர்வ மலர்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படும். இதனிடையே, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஏற்கனவே, இந்தாண்டு கோடை வெயில் வழக்கத்துக்கு மாறாக மிகவும் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சேலத்தில் வெளியில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

கரூர் மற்றும் மதுரை நகரங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. சுமார் 99.5 டிகிரி வெப்பம் காய்ச்சி எடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: