இந்தியாவில் கூகுள் ஹோம் அறிமுகம்

news18
Updated: April 11, 2018, 11:56 AM IST
இந்தியாவில் கூகுள் ஹோம் அறிமுகம்
கூகுள் ஹோம்
news18
Updated: April 11, 2018, 11:56 AM IST
குரல் வழியாக தேடுபொறி வசதியை அளிக்கும் கூகுள் அசிஸ்டென்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹோம் என்ற பெயரில் இந்த அசிஸ்டென்ஸ் வெளிவந்துள்ளது.

குரல் வழியாக பல்வேறு வசதிகளை கூகுள் ஹோம் கொண்டிருக்கிறது. இதன் மூலம் வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்களை கட்டுப்படுத்த முடியும். உங்களுடைய செயல்பாடுகளை இதில் பதிவேற்றிக் கொண்டால் உங்களுக்கு உரிய நேரத்தில் செயல்பாடுகளை நினைவூட்டும். மேலும் இதன் மூலம் உங்களுடைய போன் இருக்கும் இடத்தையும அறிந்து கொள்ளமுடியும். கூகுள் ஹோம் மற்றும் கூகுள் மினி கருவிகளின் விலை முறையே ரூ.9,999, ரூ.4,499 ஆகும். இந்த கருவிகள், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், டாடா குரோமா போன்ற முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும்.

இதுகுறித்து கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், ”உலகம் முழுவதும் தற்போது 119 மொழிகளில் 1 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்றும், கூகுள் ஓகே செயலி மூலம் மொபைல் போனில் டைப் செய்யாமல் குரல் வழியாக தகவல்களைத் தேடலாம்” என்று கூறினார்.

கூகுள் நிறுவனத்தின் வீட்டுப் பொருட்கல் பொது மேலாளர் ரிஷி சந்திரா கூறுகையில்,  “தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வசதி உள்ளது. விரைவில் இதர மொழிகளில் கொண்டுவரப்படும். 4.5 லட்சம் பேர் இந்த புதிய சேவையை பயன்படுத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.
First published: April 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்