மூக்கை மூடிக்கொண்டு சாப்பிட்டால் உணவின் சுவை தெரியுமா? ஜலதோஷம், மூக்கடைப்பு ஆகிய பாதிப்புகளின் போது, உணவின் சுவையே தெரியாது ஏனென்றால், உணவின் மணத்தை உங்களால் உணர முடியாது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதைப்பற்றி நன்றாக அறிவார்கள். வாசனையை உணரும் புலன் இல்லை என்றால், சுவை தெரியாது.
எனவே, உணவுகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உணவின் சுவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் நறுமணமும் முக்கியம். சமைக்கும் போது தோன்றும் உணவின் வாசமே நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் மற்றும் பசியைத் தூண்டும். தாளிப்பு வாசனை, மசாலா பொருட்களை வறுக்கும் அல்லது அரைக்கும் போது தோன்றும் மணம் தான் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தையே ஏற்படுத்தும். உணவில் சுவையும் மணமும் சேர்க்கவே குறிப்பிட்ட உட்பொருட்கள் உள்ளன. உணவின் மணம் உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்திய சமையல் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகும். இன்று பல நாட்டு உணவுகள் எளிதாக கிடைக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள உணவு வகைகளுக்கு முன் உலகமே தோற்கும் என்று கூறும் அளவுக்கு அவ்வளவு வெரைட்டி இருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும், மாநிலத்தின் வெவ்வேறு சமூகங்களுக்கும் பிரத்யேகமான உணவு வகைகள் உள்ளன. இந்திய உணவின் தனித்துவம் சமைக்கும் போது சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அதே போல, முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த நெய்யில் சில மசாலாப் பொருட்களை பொறித்து சாப்பிடும் பழக்கம் தொடங்கியது. அதே போல, குளிர்பானங்களில் ரோஜா சாறு சேர்ப்பதும் தொடங்கியது.
இதையும் படியுங்கள் : உபியில் 57 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
ஆல்ஃபாக்டரி (வாசனை) நரம்புகள், உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு, மூளைக்கு சிக்னல்கள் அனுப்பும். இது பசியை தூண்டும் மற்றும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, நறுமணமிக்க உணவுகள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் என்று ஆயுர்வேதா கூறுகிறது.
அது மட்டுமின்றி, உணவின் வாசம், நரம்புகளை அமைதியாக்கி, உங்கள் மன நிலையை சமநிலைப் படுத்துகிறது. பயங்கர டென்ஷனாக அல்லது குழப்பமான இருக்கும் போது, பிடித்த உணவு சமைக்கும் வாசனையை உணரும் போதே, கொஞ்சம் நிதானமாக உணர்வீர்கள்.
இதையும் படியுங்கள் : பிரதமர் நரேந்திர மோடியின் தாய் எடைக்கு ஈடான தங்கத்தை, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்த நபர்...
உணவில் நறுமணத்துக்காக சேர்க்கப்படும் பெரும்பாலான பொருட்களில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இஞ்சி, பூண்டு, ஏலக்காய், ஜாதிபத்ரி, பட்டை உள்ளிட்ட பொருட்களை உணவில் சிறிதளவில் சேர்க்கும் போதே மணமும் சுவையும் அதிகரிக்கும்.
கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக்கும் சுவையான மற்றும் நறுமணம் மிக்க உணவுகளின் பட்டியல்:
ரோஜா இதழ்கள் அல்லது பன்னீர் அல்லது ரோஸ் மில்க் பவுடர் ஆகியவற்றை சர்பத், குளிர் பானங்களில் சேர்க்கும் போது சுவையும் மணமும் மட்டுமின்றி, நிறமும் பசியைத் தூண்டும். ரோஜா சருமத்தை மென்மையாக்குகிறது, மற்றும் பாக்டீரியா, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில், தலை முதல் கால் வரை, உள்ளும் புறமும் குளிர்ச்சியாக உணர நறுமணம் மிக்க வெட்டிவேரைப் பயன்படுத்தலாம். தண்ணீரைக் கூட நறுமணம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானமாக, வெட்டிவேர் மாற்றும்.
இதையும் படியுங்கள் : உ.பி தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை ரூ.125-வரை அதிகரிக்கலாம் - பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
எவ்வளவு மறைவில் வைத்திருந்தாலும் தாழம்பூவின் நறுமணத்தை மறைக்க முடியாது. தாழம்பூவைப் பயன்படுத்தி கூந்தலை விதவிதமான அலங்கரிக்கும் பல காலமாக உள்ளது. தாழம்பூவின் மனமும், நற்குணங்களும் முழுமையாக அறியப்பட்டு, கெவ்ரா வாட்டர் என்று சந்தையில் பிரபலமாகி வருகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைப்பதோடு, அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தி, மனநிலையை அமைதியாக்குகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.