புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பாதிப்புகள் என்ன? - எப்படி சமாளிப்பது!

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பாதிப்புகள் என்ன? - எப்படி சமாளிப்பது!

கோப்புப் படம்

குழந்தையின் பட்டு போன்ற மென்மையான தோல் எளிதாக தடிப்பு, கட்டி போன்ற அலர்ஜியால் பாதிக்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிதாக பிறந்த குழந்தையின் பட்டு போன்ற மென்மையான தோல் எளிதாக தடிப்பு, கட்டி போன்ற அலர்ஜியால் பாதிக்கப்படுகிறது. ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான் பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஆனால் சில நேரங்களைத்தில் இது குழந்தைகளுக்கு தீவிர பதிப்புகளை ஏற்படுத்தி விட கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தடிப்புகளில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை மற்றும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என்றாலும் பெற்றோர்கள் தங்கள் புதிய குழந்தையை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர வளர காலப்போக்கில் பல வகையான ரேஷ்கள் உருவாகும். பெற்றோர்கள் குழந்தைகள் மீது ஒரு கண் வைக்காவிட்டால், குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் ரேஷ்களுக்கான காரணங்களை உணர முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான சில தடிப்புகள் மற்றும் கட்டிகள் குறித்து பார்ப்போம்.

முகப்பரு அல்லது இளஞ்சிவப்பு பருக்கள் :

அறியப்படாத காரணங்களால் பொதுவாக பிறந்த புதிய குழந்தைகளுக்கு கன்னங்கள், மூக்கு மற்றும் நெற்றியில் பருக்கள் தோன்றும். இதற்கு கருப்பையில் உள்ள தாய்வழி ஹார்மோன்களின் வெளிப்பாடு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வகையான பருக்கள் சிறிதாக சிவப்பு நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் பருக்களின் மையத்தில் ஒரு வெள்ளை புள்ளி இருக்கும். இப்படி இருக்கும் பருக்களுக்கு சிகிச்சை எது தேவையில்லை. சில வாரங்கள் அல்லது ஒன்றிரண்டு மாதங்களில் படிப்படியாக தானே மறைந்து விடும்.

குழந்தை பிறந்த முதல் மாதத்திற்குள் இந்த பருக்கள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த முகப்பரு பாதிப்புக்குள்ளான குழந்தையின் முகத்தில் உள்ள பகுதியை மென்மையான காட்டன் அல்லது தூய துணியால் துடைத்து பெற்றோர்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியம். எனவே குழந்தையின் சருமத்திற்கு தேவையான போதெல்லாம் லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இந்த வகை முகப்பருக்கள் ஒரு மாதம் ஆகியும் குறையாமல், தீவிரமாகி இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

கிரிடில் கேப்:

கிரிடில் கேப் என்பது பிறந்த குழந்தைகளுக்கு உச்சந்தலையில் ஏற்படும் ஒரு வகையான தோலழற்சி. குழந்தையின் இரண்டாவது வாரம் முதல் அடுத்த 12 மாதங்கள் வரை இந்த அழற்சி ஏற்படுகிறது. இதன்போது குழந்தைகளின் உச்சந்தலையில் மஞ்சள் அல்லது பழுப்பு நிற செதில்கள் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இது பொடுகு போன்றது. சில நேரங்களில் இது குழந்தையின் முகம் அல்லது கழுத்து வரை கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Also read... குழந்தை சீக்கிரமாக நடப்பதை பார்க்க ஆசைப்படுகிறீர்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

இது தொற்று இல்லை என்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியில் பூஞ்சை மற்றும் அதிக அளவு சருமம் இருப்பதால் இது நிகழ்வதாக கருதப்படுகிறது. கிரிடில் கேப் காரணமாக குழந்தைகளின் உச்சந்தலையில் இருந்து செதில்கள் விழும்போது ஓடவே அவர்களது முடிகளும் உதிர்கின்றன. இதற்கு பேபி ஆயிலை குழந்தையின் உச்சந்தலையில் வைத்து மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து மென்மையான பிரஷ்ஷை பயன்படுத்தி செதில்களை மெதுவாக அகற்றி, பின் பேபி ஷாம்பூவை பயன்படுத்தி தலையை அலசி விடலாம்.

எரித்திமா டாக்சிகம் :

குழந்தை புதிதாக பிறந்த சில நாட்களில் ஏற்படும் பொதுவான ஒரு சிவந்த ரேஷ் வகையாகும். இது இளைஞர்களையும், பெரியவர்களையும் பாதிக்கும் முகப்பருவைப் போன்றது அல்ல. பிறந்த குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லாத போதும் இந்த வகையான ரேஷ் ஏற்படும் என்று கூறப்படுகிறது. பொதுவாக பிறகும் பொது கூடுதல் எடை கொண்ட குழந்தைகள், கோடை அல்லது இலையுதிர்காலத்தில் பிறந்த குழந்தைகள், பால் பவுடர் மாற்று அல்லது கலப்பு உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்த வகையான தடிப்புகள் உடையும் போது அதிலிருந்து திரவம் வரும். இது குழந்தையின் மார்பு, கழுத்து மற்றும் முகத்தில் தோன்றும்.

டயபர் ரேஷ்:

இது டயப்பரால் குழந்தையின் மூடப்பட்டிருக்கும் பகுதியில் ஏற்படும் தோல் எரிச்சல் ஆகும். குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் நேரத்தில் இது ஏற்படும். டயபர் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தடிப்புகள் லேசானவை மற்றும் தொடையின் கீழ் பகுதியில் ஏற்படும். சிறுநீர் கழித்த டயப்பரை நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது, குழந்தைக்கு அலர்ஜி, பூஞ்சை அல்லது ஈஸ்ட் தொற்று உள்ள டயப்பரில் இருக்கும் சில கெமிக்கல்கள் என பல காரணங்களால் ஏற்படுகிறது.

டயபர் தடிப்புகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு கொஞ்சம் கடினமே. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது டயபர் பயன்படுத்தும் பகுதி எப்போதும் சற்று ஈரப்பதமாகவே இருக்கும் என்பதால், அவ்வப்போது உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் டயபர் ரேஷ்களுக்கும், இனி ஏற்படாமல் இருக்கவும் ஜின்க்(zinc) கலந்த ஆயின்மென்ட் பயன்படுத்தலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: