முன்பை விட அதிக ஞாபக மறதி ஏற்படுகிறதா? இதற்கு உங்கள் தூங்கும் நேரமும் காரணமாக இருக்கும்!

மாதிரி படம்

சிலர் இயற்கையாகவே மறதியை கொண்டுள்ளனர். சிலருக்கு தூக்கம், உணவு, பழக்கவழக்கம், சுற்றுப்புறம் போன்றவை முக்கிய காரணமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மறதி என்பதை நாம் பெரும்பாலும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். சிலர் இயற்கையாகவே மறதியை கொண்டுள்ளனர். சிலருக்கு தூக்கம், உணவு, பழக்கவழக்கம், சுற்றுப்புறம் போன்றவை முக்கிய காரணமாக உள்ளது. தூக்கத்தின் போது சுவாசம் மீண்டும் மீண்டும் தடைபடும்போது ஏற்படும் 'தூக்க தடுப்பு மூச்சுத்திணறல்' (obstructive sleep apnea) எனப்படும் கோளாறு சிந்தனை மற்றும் நினைவக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பொதுவானது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஒருவருக்கு வயதாகும்போது நினைவாற்றல் குறைபாட்டின் ஆபத்து அதிகரிக்கிறது. கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர் மார்க் பலோஸ், “சிறந்த தூக்கம் மூளைக்கு நன்மை பயக்கும் மற்றும் நினைவாற்றல் திறன்களை மேம்படுத்தும் என கூறியுள்ளார்.

எனினும் எங்கள் ஆய்வில், நினைவாற்றல் குறைபாடுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்."தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவக சோதனைகளில் குறைந்த ஸ்கோர்கள் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் இந்த மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்வது முக்கியம், ஏனென்றால் சிகிச்சையுடன், சிந்தனை மற்றும் நினைவக திறன்களை மேம்படுத்துவதற்கான திறனும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் இதில் அடங்கியுள்ளது” என்றார்.

இந்த ஆய்வில் நினைவாற்றல் குறைபாடுள்ள (cognitive impairment) சராசரி 73 வயதுடைய 67 பேர் ஈடுபட்டனர். பங்கேற்பாளர்கள் தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை குறித்த கேள்விகளுக்கான பதிலை அளித்தனர். குறிப்பாக அவர்கள் நினைவாற்றல் குறைபாட்டின் அளவை தீர்மானிக்க 30 மதிப்பெண்களை கொண்ட கேள்விகளை கொண்டிருந்தனர். ஆய்வில் பங்கேற்ற 52 சதவிகிதத்தினருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தூக்கக் கோளாறு உள்ளவர்கள் நினைவாற்றல் சோதனையில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் இல்லாதவர்களைக் காட்டிலும் 60 சதவீதம் குறைவாக ஸ்கோர்களை பெறுவார்கள் என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூரோலஜியின் ஆய்வு கூறுகிறது.

இதன் வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 17 முதல் 22 வரை நடைபெற உள்ளது. கூடுதலாக, ஆய்வாளர்கள் தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறலின் தீவிரத்தன்மை நினைவாற்றல் குறைபாட்டின் அளவையும், பங்கேற்பாளர்களின் தூக்கத்தின் தரத்தையும், தூக்க நேரம், எவ்வளவு விரைவாக தூங்குகிறார்கள், தூக்கத்தின் செயல்திறன் மற்றும் தூக்கத்தில் எப்போதெல்லாம் அடிக்கடி விழித்திருக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

"நினைவாற்றல் குறைபாடுள்ளவர்கள் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதை மதிப்பிட வேண்டும், அப்படி செய்தால் 'தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்த' (continuous positive airway pressure (CPAP)) இயந்திரத்தைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடியும், இது இரவில் காற்றுப்பாதையைத் திறந்து வைக்க உதவுகிறது," என்று பலோஸ் கூறினார். இருப்பினும், CPAPஐ பயன்படுத்தும் அனைவரும் தொடர்ந்து சிகிச்சையைப் பயன்படுத்தத் தேர்வுசெய்வதில்லை, மேலும் இது சிந்தனை மற்றும் நினைவக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.

Also read... தாய்ப்பால் நிறம் மாறுவது ஏன்? காரணங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

"நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு திறமையான மற்றும் பயன்படுத்த எளிதான நோயைக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான வழிகளைத் தீர்மானிப்பதில் எதிர்கால ஆராய்ச்சி இயக்கப்பட வேண்டும்" என்று பலோஸ் கூறினார். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் ஞாபகமறதி ஏற்படும் ஆனால் இப்பொழுதோ படிக்கும்போதே மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது. இந்த வயசில் உனக்கு ஞாபகமறதியா? என்று பலரும் அவர்களை சந்தேகிப்பதுண்டு. ஆனால் மேற்கண்ட ஆய்வே இதற்கான விளக்கத்தை நமக்கு அளிக்கிறது. இனிமேலாவது உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சுற்றுப்புறத்திலோ யாராவது ஞாபகமறதி சிக்கல் கொண்டிருந்தால் அவர்களை புரிந்து நடந்து கொண்டு அவர்களுக்கான தீர்வுகளை வழங்க முயற்சி செய்யுங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: