Home /News /lifestyle /

குழந்தைகள் உயரமாக வளர என்னென்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

குழந்தைகள் உயரமாக வளர என்னென்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

குழந்தைகள் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்

குழந்தைகள் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்

உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியானது, உயரம் மற்றும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. எனவே குழந்தைகளின் தினசரி உணவில் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல அவர்களது தன்னம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் உள்ளது. உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியானது, உயரம் மற்றும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. 2-10 வயதுக்கு இடையில், குழந்தைகள் சீரான வேகத்தில் வளர்கிறார்கள், ஆனால் குழந்தைகள் வளர வளர உயரமாவதன் வேகம் குறைகிறது. இதனால் இறுதி வளர்ச்சி 9 முதல் 15 வயதிற்குள் நிகழ்கிறது.

    பிறந்த குழந்தையின் மாதாந்திர வளர்ச்சியைக் கண்காணிப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல குழந்தைகள் வளர வளர அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும் அவசியம். குழந்தைகளின் வளர்ச்சி அவர்களுடைய மரபணுவுடனும் தொடர்புடையது. பொதுவாக ஆண் பிள்ளைகள் அப்பாவின் உயரத்திலும், பெண் பிள்ளைகள் அம்மாவின் உயரத்திலும் இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

    Also Read : குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    பொதுவாகக் குழந்தைகளின் வளர்ச்சி அவர்களின் ஊட்டச்சத்தினை பொறுத்தே அமைகிறது. குறைவாக ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளும் சிறுவர்கள் வளர்ச்சியில் குறைபாட்டைக் காண்கிறார்கள். குழந்தைகள் உயரமாக வளர விரும்பும் பெற்றோர்கள், அவர்கள் ஆரோக்கியமான, சரியான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுவதை உறுதிப்படுத்துவதோடு, எண்ணெய், பதப்படுத்தப்பட்ட மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளைச் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.

    குழந்தைகள் உயரமாக வளர என்னென்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் தேவை என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்:

    1. பால்:

    பால்


    குழந்தைகள் உயரமாக வளர பசும் பால் உதவுவதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில் பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் காணப்படுகிறது. இவை குழந்தைகளின் எலும்பின் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கிறது.

    2. முட்டை:

    முட்டை


    முட்டை புரதச் சத்துக்கான சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. மேலும் முட்டையின் வெள்ளைக்கருவில் க்ளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் ஆகிய ஊட்டச்சத்துக்களும், மஞ்சள் கருவில் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதோடு, அவர்களுக்குப் பிடித்த வகையில் பல்வேறு உணவாகத் தயார் செய்து கொடுக்கவும் ஏற்றது.

    3. இறைச்சி:

    இறைச்சி


    கோழி, வான்கோழி, வாத்து, ஈமு, வாத்து போன்ற பறவைகளின் இறைச்சி மற்றும் கொழுப்பு அமிலமான ஓமேகா -3 அடங்கிய மீன் வகைகளும் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன. இவற்றில் உள்ள அயோடின், இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள், குறிப்பாக பி12, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஆகியவை குழந்தையின் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது.

    4. பருப்பு வகைகள்:

    பருப்பு வகைகள்


    பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள. அவை உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

    5. கீரை வகைகள்:

    கீரை வகைகள்


    முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் கீரைகள் ஆகிய பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இது எலும்பு மறு உருவாக்கம், எலும்பு திசுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது.

    6. நட்ஸ் வகைகள்:

    நட்ஸ் வகைகள்


    நட்ஸ் எனப்படும் கொட்டை வகைகளில் குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Children, Healthy Food, Iron Rich Foods

    அடுத்த செய்தி