Home /News /lifestyle /

உங்களிடம் பாலியல் உணர்ச்சி மற்றும் ஆசை குறைந்துவிட்டதா? - அதை இயற்கையாக மீட்டெடுப்பது எப்படி?

உங்களிடம் பாலியல் உணர்ச்சி மற்றும் ஆசை குறைந்துவிட்டதா? - அதை இயற்கையாக மீட்டெடுப்பது எப்படி?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வாழ்வியல் மாற்றங்களினால் பாலியல் உணர்ச்சிகள் குறைகிறது. அதனை இயற்கையாக சில உணவுகள் முலம் சரிசெய்யலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உணவு மற்றும் முறையான தூக்கத்திற்கு அடுத்தபடியாக, நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் 3ஆம் தூணாக பாலியல் உறவு இருக்கிறது என்று அறிவியல் கூறுகிறது. ஆனால், இன்றைய இயந்திர உலக வாழ்க்கை அல்லது மாறி வரும் வாழ்க்கைச் சூழல் காரணமாகப் பலருக்கு பாலியல் நாட்டம் என்பது சிறிது, சிறிதாகக் குறைந்து கொண்டே போகிறது அல்லது உடலில் போதிய வலு இல்லாமல் இருக்கிறது.

    உடலில் பாலியல் சக்தி குறைவதை லிபிடோ சக்தி குறைபாடு என்று வரையறை செய்கின்றனர். குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் 62 விதமான நீண்ட கால பாதிப்புகளில் இந்த லிபிடோ குறைபாடும் ஒன்றாகும்.

    கொரோனாவுக்கு பிந்தைய நோயாளிகள் பலர் தங்களுக்கு பாலியல் உணர்ச்சி குறைந்துள்ளது என்றும் பாலியல் சக்தி குறைந்துள்ளது என்றும் கூறுவதாகத் தெரிவிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஏற்கனவே உடல் சோர்வு, மனச்சோர்வு போன்ற தொந்தரவுகளை எதிர்கொண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கு, பாலியல் ஆசை குறைவது என்பது இயல்பான விஷயம்தான்.

    இது மட்டுமல்லாமல் கொரோனா காலத்தில் கடைப்பிடித்த சமூக விலகல், தனிமைப்படுத்துதல் போன்ற பழக்கங்கள் மற்றும் கவலை, மன அழுத்தம், தனிமை உணர்ச்சி போன்ற பிரச்சனைகள் சேர்ந்து மக்களை மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதித்திருக்கிறது.

    Also Read : எவ்வளவு முயற்சித்தும் பக்கோடா மொறுமொறுப்பாக வரவில்லையா..? அடுத்த முறை இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

    இயற்கையான தீர்வுகள் உண்டு

    இழந்துவிட்ட லிபிடோ அல்லது பாலியல் சக்தியை மீட்டெடுக்க மக்கள் பலர் மருந்துகளை உட்கொள்கின்றனர். ஆனால், சில இயற்கையான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உடல் தாமாகவே உறிஞ்சிக் கொள்ளும் என்று ராதாமோனி தெரிவிக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பட்டியலிட்டுள்ள உணவுகளைப் பார்க்கலாம்.

    மாதுளம்பழம்

    மாதுளம்பழம் பாலியல் சக்தியை மேம்படுத்துவதுடன், இனப்பெருக்க நீர்மங்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது. பெண்கள் தினசரி சாப்பிடுவது மிகவும் நல்லது.

    பார்லி சூப்

    நமது பிறப்பு உறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆண்களின் விரைப்புத்தன்மை மேம்பட உதவுகிறது.

    பேரீச்சை

    ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் கருத்தரித்தல் திறனை மேம்படுத்துவதற்கு பேரீச்சை மிகவும் உதவியாக உள்ளது.

    உளுந்து சூப்

    நமது வீட்டில் சாதாரணமாக மழைக்காலங்களில் எடுத்துக் கொள்ளப்படும் உளுந்து கஞ்சியுடன் நெய் மற்றும் இந்து உப்பு சேர்த்துப் பருகலாம். இது பாலியல் வலுவை அதிகரிக்க உதவும்.

    முருங்கை

    விந்தணு மற்றும் கருமுட்டைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி முருங்கையில் உண்டு. தினசரி முருங்கை கீரை சூப் அருந்தலாம் அல்லது சாம்பார், குழம்பு போன்றவற்றில் முருங்கை காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
    Published by:Janvi
    First published:

    Tags: Healthy sex Life, Sexual Health

    அடுத்த செய்தி