Swiggy-Zomato: ஸ்விகி, ஸொமேட்டோ நிறுவனங்களை விடாமல் துரத்தும் பிரச்சனைகள்!

Swiggy-Zomato: ஸ்விகி, ஸொமேட்டோ நிறுவனங்களை விடாமல் துரத்தும் பிரச்சனைகள்!

ஸ்விகி - ஸொமேட்டோ

உணவு டெலிவரி செய்ய சென்ற சோமாட்டோ நிறுவனத்தின் டெலிவரி மேன் தாக்கியதாக ஆன்லைனில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது

  • Share this:
பெங்களுருவை சேர்ந்த பெண் ஒருவர், உணவு டெலிவரி செய்ய சென்ற சோமாட்டோ நிறுவனத்தின் டெலிவரி மேன் தாக்கியதாக ஆன்லைனில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. வீடியோவில் அந்த பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. பலரும் இதற்காக குரல் எழுப்பிய நிலையில், காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட சோமாட்டோ டெலிவரி மேனை கைது விசாரித்தனர். அப்போது, உணவு கொண்டு செல்ல தாமதமானதாகவும், அதற்காக இலவசமாக உணவை கொடுத்துசெல்லுமாறு அடம்பிடித்து தகாத வார்த்தைகளில் அந்த பெண் திட்டியதாகவும் டெலிவரிமேன் கூறினார்.

இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலம் உணவு டெலவரி செய்யும் ஸ்விகி மற்றும் சோமாட்டோ நிறுவனங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பது புதிதல்ல. மார்ச் 2020, பெங்களூருவில் ஆர்டர் எடுக்க தாமதமாக சென்ற சோமாட்டோ நிறுவன ஊழியரை ரெஸ்டாரண்ட் ஊழியர் தாக்கினார். இதில், சோமாட்டோ ஊழியரான ஜெகதீஷ் என்பவரின் முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விசாரணையில், தாமதமாக சென்றதால் ஆர்டருக்கு போட்டுவைத்த சூடான டீ ஆறிவிட்டதற்காக, அந்த நபர் ஜெகதீஷை தாக்கியுள்ளார். ஏப்ரல் 2019, பெங்களுருவில் சூப் ஆர்டர் செய்த பெண்ணை, ஸ்விகி டெலிவரி மேன் பாலியல் இச்சைக்கு அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஸ்விகி நிறுவனம், 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் மற்றும் மன்னிப்பு கடிதத்தை அனுப்பி வைத்தது.

பிப்ரவரி 2019-ல் ஸ்விகி செயலி மூலம் நூடுல்ஸை சென்னைவாசி ஆர்டர் செய்திருந்தார். பார்சலை பிரித்து பார்த்தபோது, ரத்தகறை படிந்த பேண்டேஜ் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் புகார் செய்தார். இதற்கு ஸ்விகி நிறுவனம் மன்னிப்பு கோரியது.

டிசம்பர் 2018, மதுரையைச் சேர்ந்த சோமாட்டோ நிறுவன டெலிவரிமேன், வாடிக்கையாளரின் ஆர்டரில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், அந்த டெலவரிமேனை சோமாட்டோ நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

ஜூன் 2017, உணவை தாமதமாக டெலிவரி செய்ததற்காக, டெலவரிமேனை தனியார் நிறுவன ஊழியர் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதுகுறித்து டெலிவரிமேன் அளித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறை, தனியார் நிறுவன ஊழியரை கைது செய்தது. கன்னடர் குறித்து அந்த நபர் கீழ்தரமாக பேசியது விசாரணையில் தெரியவந்தது.

பிப்ரவரி 2019, சென்னையைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் உணவகத்தில் ஸ்விகி மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்யும்போது 12 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என ஸ்விகி செயலியில் காட்டப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் ராஜஸ்தானில் இருந்து வருவதாக செயலியில் காண்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் ஸ்விகி நிறுவனத்துக்கு இது குறித்து புகார் அளித்தார்.

ஜூன் 2020, இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தாக்கியதில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் சோமாட்டோ நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், நிறுவனத்தின் டீ சர்ட்டை கிழித்து தீயிட்டு கொளுத்தினர். பலர், தங்களின் வேலையை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். சோமாட்டோ நிறுவனத்தில் சீன முதலீடு இருப்பதாக அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர்.

2018 ஆம் ஆண்டு, சோமாட்டோ நிறுவனத்தில் டெலிவரிமேன்களாக பணியாற்றும் ஊழியர்களுக்கு, கம்பெனி ஊழியர்களுக்கு கொடுக்கும் சலுகைகளை கொடுப்பதில்லை என்பதை நியூஸ் 18 வெளிக்கொண்டு வந்தது. குறிப்பாக, சாலை விபத்துக்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் இருந்தும், டெலிவரிமேன்களை குறிப்பிட்ட நேரத்தில் பார்சல்களை டெலிவரி செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கட்டாயப்படுத்துவது சுட்டிக்காட்டப்பட்டது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Shalini C
First published: