முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சில்லுனு மழைக்கு ஹாட் மற்றும் கிரிஸ்பியான சிக்கன் நகெட்ஸ் ரெசிபி..!

சில்லுனு மழைக்கு ஹாட் மற்றும் கிரிஸ்பியான சிக்கன் நகெட்ஸ் ரெசிபி..!

சிக்கன் நக்கெட்ஸ்

சிக்கன் நக்கெட்ஸ்

இந்த சிக்கன் நக்கெட்ஸை தக்காளி சாஸ் அல்லது மயோநைஸுடன் டிப் செய்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் பிரெட் கிரம்ஸில் புரட்டி எடுத்த பின்னர் அதை ஃப்ரீசரில் ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் வரை ஸ்டோர் செய்து தேவைபடும் சமயத்தில் பொறித்து சாப்பிடலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த மழை சீசனில் மாலை நேரத்தில் எதையாவது சூடாக சாப்பிட்ட அனைவருமே விரும்புவார்கள். பொதுவாக மாலை ஸ்நாக்ஸ் என்றாலே அனைவருக்கும் சட்டென நினைப்பது வடை, பஜ்ஜி, போண்டா தான். இல்லையெனில் பர்கர், ஃப்ரைடு சிக்கன் போன்றவை சாப்பிட தோன்றும். அவற்றை கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் நக்கெட்ஸை செய்ய ஈஸியான சூப்பர் ரெசிபி இதோ.!

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்

ஆனியன் பவுடர் - 1 டீஸ்பூன்

கார்லிக் பவுடர் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கோதுமை பிரெட் - 2

முட்டை - 1

பிரெட் கிரம்ஸ்

எண்ணெய்

செய்முறை :

சிக்கன், ஆனியன் பவுடர், கார்லிக் பவுடர், மிளகாய் தூள்,சோயா சாஸ், கோதுமை பிரெட் இவை அனைத்தையும் தேவையான் அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து எடுத்து கொள்ளுங்கள்.

Also Read : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரம் கேக்...15 நிமிடதிலேயே செய்ய டிப்ஸ்..!

பின்னர் அரைத்து வைத்த சிக்கன் மாவை நக்கெட்ஸ் வடிவில் பிடித்து அதை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் கிரம்ஸில் முழுவதுமாக கோட் ஆகும் வரை புரட்டி எடுத்து தனியே வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சூடான பிறகு பிடித்து வைத்த நக்கெட்ஸை பொந்நிறமாக பொறித்து எடுத்தால் சிக்கன் நக்கெட்ஸ் ரெடி !

இந்த சிக்கன் நக்கெட்ஸை தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் டிப் செய்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் பிரெட் கிரம்ஸில் புரட்டி எடுத்த பின்னர் அதை ஃப்ரீசரில் ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் வரை ஸ்டோர் செய்து தேவைபடும் சமயத்தில் பொறித்து சாப்பிடலாம்.

First published:

Tags: Chicken, Chicken recipe