இட்லி மாவை வைத்து சுவையான ஜிலேபி செய்யலாம்... 

சுவையான ஜிலேபியை வீட்டில் நாம் அரைத்து வைக்கும் இட்லி மாவினை கொண்டு மிக குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம்.

சுவையான ஜிலேபியை வீட்டில் நாம் அரைத்து வைக்கும் இட்லி மாவினை கொண்டு மிக குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம்.

 • Share this:
  ஜிலேபி போன்ற ஸ்வீட்களை பெரும்பாலும் நாம் கடைகளுக்கு சென்று தான் வாங்குவோம். இவற்றை வீட்டில் செய்தால் நேரம் அதிகமாகும் என்ற காரணத்திற்காகவே கடைகளில் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் சுவையான ஜிலேபியை வீட்டில் நாம் அரைத்து வைக்கும் இட்லி மாவினை கொண்டு மிக குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம். இதனை நாளை கிருஷ்ண ஜெயந்திக்கும் செய்து கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யலாம்.  அதனை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

  தேவையான பொருட்கள்:

  இட்லி மாவு – ஒரு கப்,

  ஃபுட் கலர் – அரை ஸ்பூன்,

  உப்பு கால் – ஸ்பூன்,

  சர்க்கரை – அரை கப்.  செய்முறை:

  அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை கைவிடாமல் சிறிது நேரம் கலந்து கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை கெட்டியாகி கையில் தொடும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் பதத்திற்கு வந்து விடும். அந்த சமயத்தில் அடுப்பை அனைத்து சர்க்கரைப் பாகினை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரைப் பாகில் ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

  பிறகு கெட்டியான இட்லி மாவுடன் கால் ஸ்பூன் ஃப்ட் கலர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு டம்ளரில் பால் கவர் அல்லது ஏதேனும் சிப்கவர் வைத்து கலந்து வைத்துள்ள மாவினை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கவரை நன்றாக சுருட்டி டைட்டாக ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க...கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... உப்பு சீடை ரெசிபி...

  அதன் பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு கப் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும், மாவு ஊற்றி வைத்துள்ள கவரின் ஒரு முனையை கத்தரிக்கோல் வைத்து சிறிய ஓட்டையாக  வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஜிலேபி போன்று வட்ட வடிவில் எண்ணெயின் மீது பிழிந்து விட வேண்டும். ஜிலேபி நன்றாக வெந்ந்ததும் ஏற்கனவே செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் சேர்க்க வேண்டும். இவை நன்றாக ஊறியதும் தனியாக எடுத்து தட்டில் வைத்து பரிமாறலாம்.

  குறிப்பு: சில சமயங்களில் இவ்வாறு பொரித்து எடுக்கும் பொழுது சரியாக வராமல் திரிந்து விட்டால் இட்லி மாவுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: