ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மஞ்சள் நெய் அல்லது வெள்ளை நெய்… இரண்டில் எது சிறந்தது..?

மஞ்சள் நெய் அல்லது வெள்ளை நெய்… இரண்டில் எது சிறந்தது..?

நெய்

நெய்

நல்ல கொழுப்பு, புரதச்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ள நெய், உங்கள் சருமம், முடி, இதய ஆரோக்கியம், செரிமானக் கோளாறுகளுக்கான தீர்வாக என்று பல விதங்களில் நன்மை அளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இனிப்புகளாக இருந்தாலும் சரி, கார உணவு வகைகளாக இருந்தாலும் சரி, கொஞ்சம் நெய் சேர்த்தால் உணவின் மணமும் சுவையும் கூடிவிடும். சுவை என்பதைத் தவிர்த்து, நெய்யில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் எடை கூடி விடுமோ அல்லது கொலஸ்ட்ரால் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தால் பலரும் உடலுக்கு தேவையான நெய்யை உணவில் சேர்க்காமல் தவிர்க்கின்றனர்.

நெய் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. நல்ல கொழுப்பு, புரதச்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ள நெய், உங்கள் சருமம், முடி, இதய ஆரோக்கியம், செரிமானக் கோளாறுகளுக்கான தீர்வாக என்று பல விதங்களில் நன்மை அளிக்கிறது. ஆனால் பல காலமாக மஞ்சள் நிற நெய்யை பயன்படுத்தலாமா? அல்லது வெள்ளை நிற நெய்யை பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இரண்டு வகையான நெய் பற்றியும் இங்கே அறிந்து கொள்வோம்.,

வெள்ளை நிறத்தில் இருக்கும் நெய் எருமைப்பாலில் இருந்து செய்யப்படுகிறது. எருமை நெய் எலும்புகளின் அடர்த்தி மற்றும் ஆரோக்கியம், உடல் எடை அதிகரிப்பு, கார்டியோ வாஸ்குலார் தசை செயல்பாடுகள் போன்ற உடல் செயல்பாடுகளை மேம்படுத்த ஏற்றதாக இருக்கும்.

மஞ்சள் நிறத்தில் இருப்பது பசு நெய் ஆகும். பசு நெய் எடை குறைப்பதற்கும், ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனைக் குறைப்பதற்கும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள செரிமான கோளாறுகள் சீர் செய்வதற்கும் உபயோகப்படுத்தலாம்.

வொக்கார்ட் மருத்துவமனையின், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் அம்ரீன் ஷேக், வெள்ளை நெய் மற்றும் மஞ்சள் நெய் ஆகியவற்றின் தனிப்பட்ட நன்மைகளைப் பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் நெய்யை அதாவது பசு நெய்யோடு ஒப்பிடும் போது வெள்ளை நெய்யில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். பசும்பாலில் இருக்கும் A2 புரதம் எருமைப்பாலில் இல்லை. எனவே பசு நெய்யில் கிடைக்கும் புரதம் எருமை நெய்யில் கிடைக்காது. இந்த A2 புரதம் நாட்டு பசுக்களின் மட்டுமே கிடைக்கும். எனவே நாட்டுப் பசுக்களில் இருந்தும் தயாரிக்கப்படும் நெய்யில், புரதம், கால்சியம், வைட்டமின் ஆகிய சத்துகள் அபரிமிதமாக உள்ளன.

அதே நேரத்தில், எருமை நெய்யும் பசு நெய்யை விட ஊட்டச்சத்து ரீதியாக எந்த விதத்திலும் குறையவில்லை. எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் மெக்னீசியம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளன. பசு நெய்யை, மஞ்சள் நிற நெய்யை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதுமட்டுமின்றி உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவுகளை சரியான அளவில் நிர்வகிக்க உதவும்.

நானாவதி மேக்ஸ் மருத்துவமனையின், தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் உஷாகிரண் சிசோடியா, இரண்டு வகையான நெய்களின் ஊட்டச்சத்து விவரங்களை ஒப்பிட்டு, குறிப்பிட்ட உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ற நெய் வகையை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளார்.

பசு நெய் மற்றும் எருமை நெய் என்ற இருவகையான நெய்களிலும் கொழுப்பு சத்து நிறைந்து இருப்பதால், இவை உங்கள் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும். ஆனால், இரண்டையும் ஒப்பிடும்போது, வெள்ளை நிற நெய்யை பயன்படுத்துவது சிறந்தது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உடலில் உற்பத்தியாகும் நல்ல பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கு வெள்ளை நெய் உதவுகிறது.

Also Read : தினமும் நெய் சாப்பிடுவதால் நல்லதா..? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..? மருத்துவ ஆலோசனை....

கண் பார்வை, சருமம் மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு வைட்டமின் ஈ கரோட்டின் நிறைந்த மஞ்சள் நிற பசு நெய் நன்மை அளிக்கும். இரண்டு விதமான நெய்களுமே செரிமான கோளாறு இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான அமைப்பு பலப்படும். வயிற்றுப்புண், குடல் புண், குடல் அழற்சி, உணவுக் குழாயில் ஏதேனும் கோளாறு ஆகிய அனைத்துமே உணவில் தினமும் நெய் சேர்த்து உண்பதால் சரியாகும் வாய்ப்பும் உள்ளது. எலும்புகளுக்கும், மூட்டுகளில் இருக்கும் இணைப்புகளுக்கும் நெய் சாப்பிடுவதால் பலம் கிடைக்கும் அதுமட்டுமின்றி நெய் உங்கள் சருமத்தை வறட்சி தடுத்து, இளமையாக வைத்திருக்க உதவும்.

First published:

Tags: Diet tips, Ghee, Health tips