ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலகின் விலை உயர்ந்த சீஸ்... ஒரு கிலோ 78 ஆயிரம்..!

உலகின் விலை உயர்ந்த சீஸ்... ஒரு கிலோ 78 ஆயிரம்..!

கழுதை சீஸ்

கழுதை சீஸ்

செர்பியாவில் ஒரு வருடத்திற்கு 15 கிலோ சீஸ் விற்கப்படுவதாகக் கூறியுள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  உலகின் அரிய வகை சீஸ் செர்பியாவில்தான் கிடைக்கிறது. இதுவெறும் சுவைக்காக மட்டுமல்ல, உடலுக்கு பல ஊட்டச்சத்துகளைக் கொடுக்கக்கூடியது.

  அப்படி இந்த சீஸ்-ல் என்ன ஸ்பெஷல்?

  கழுதைப் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் தான் இது உலகின் அரிய வகை சீஸ் என்ற பெருமையைப் பெற்றது. செர்பியாவைச் சேர்ந்த ஒரு வகை கழுதையினம் அழிந்து வருவதையொட்டி, அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாகவே இந்த சீஸ் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக கழுதைப் பால் என்றாலே மிகவும் விலை உயர்ந்ததுதான். அதிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸ் ஒரு கிலோ 78,530 ரூபாய் (1000 யூரோ).

  சீஸ் தயாரிக்கும் இந்தக் குழு, கடந்த 2012-ம் ஆண்டு முதல் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. செர்பியாவின் வட பகுதியில் இருக்கும் ஸசாவிகா (Zasavica) என்ற இடத்தில் சிமிக் (Simic) என்பவர்தான் இந்தக் குழுவை தலைமை ஏற்று நடத்தினார். இந்தச் சோதனையில் கிட்டத்தட்ட 200 கழுதைகளின் பாலை பயன்படுத்தி சீஸ் தயாரிக்கப்படுகிறது.

  பிறந்த குழந்தைக்குக் கூட நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க தாய் பால் போல் கழுதை பாலைக் கொடுக்கலாம். கழுதைப் பால் ஆஸ்துமா போன்ற தீவிர நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாக நம்பப்படுகிறது.

  இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் கழுதைப் பாலில் இன்னும் என்னவெல்லாம் நன்மைகள் இருக்கின்றன என்று கண்டறியும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சில ஆராய்ச்சிகள், கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகமாக உள்ளது என்றும், மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதோருக்கு நல்ல மாற்று கழுதைப்பால் என்றும் கூறுகிறார்கள்.

  இந்தக் கழுதைப் பாலோடு ஆட்டுப் பாலும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நாளைக்குக் கழுதைப் பாலின் அளவு மிகக் குறைவு என்பதால் அதை ஈடு செய்ய ஆட்டுப் பால் பயன்படுத்தப்படுகிறது என சிமிக் குழு கூறியுள்ளது.

  தற்போது வருடத்திற்கு 15 கிலோ சீஸ் விற்கப்படுவதாகக் கூறியுள்ளது. இதனால் அழிவை நோக்கி நகர்ந்த இந்த கழுதை இனம், நல்ல லாபம் தருவதால், விவசாயிகள் உற்சாகமாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர் என்கிறார் சிமிக்.


  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Cheese, Food, Serbia