• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக வீகன் தினம் 2021 : இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

உலக வீகன் தினம் 2021 : இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

உலக வீகன் தினம்

உலக வீகன் தினம்

வீகன்கள் முழு சைவ உணவு என்ற கோட்பாட்டை பின்பற்றி இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள் தவிர பால் பொருட்களையும் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள்.

  • Share this:
சமீப ஆண்டுகளாக இந்தியா மட்டுமின்றி உள்கைள் இருக்கும் பல நாட்டு மக்கள் வீகனிசம் (Veganism) எனப்படும் தனி உணவுமுறையை பின்பற்ற துவங்கி இருக்கின்றனர். பால் மற்றும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிடாமல் அறவே தவிர்த்து விட்டு பின்பற்றப்படும் உணவு முறையை கடைபிடிப்பவர்கள் வீகன்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். வீகன் உணவு பழக்கத்தை பின்பற்றும் வீகன் சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி (இன்று) "உலக வீகன் தினமாக" (World Vegan Day) கொண்டாடி வருகின்றனர்.

மக்கள் வீகன் வாழ்க்கை முறையை பின்பற்ற இந்த தினத்தில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். வீகன் உணவு முறை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, விலங்குகளின் நல்வாழ்வை பாதுகாக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுவதக்க கூறுகின்ற்னர் இதனை பின்பற்றுபவர்கள்.

வீகன் மற்றும் வெஜிடேரியன் வேறுபாடு..

பொதுவான சைவ உணவு முறையை (வெஜிடேரியன்) பின்பற்றுபவர்கள் இறைச்சி, முட்டை, கோழி, மீன் அல்லது பிற விலங்கு பொருட்களை சாப்பிட மாட்டார்கள். ஆனால் விலங்கிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் இதன் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், தயிர், சீஸ், பனீர், நெய் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்வார்கள்.



ஆனால் வீகன்கள் முழு சைவ உணவு என்ற கோட்பாட்டை பின்பற்றி இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள் தவிர பால் பொருட்களையும் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். விலங்குகள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முக்கியமாக உடல்நலனை காக்க வீகன் டயட் உதவுவதாக இதை பின்பற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். எளிமையாக சொன்னால் வழக்கமான சைவ பழக்கத்தோடு விலங்குகளிலிருந்து பெறப்பட்டு பால் மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் உணவு முறையே வீகனிசம் ஆகும்.

வரலாறு & முக்கியத்துவம்..

பிரிட்டனில் 1944 நவம்பரில் வீகன் சொஸைட்டி உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த 1994-ஆம் ஆண்டு நவம்பர் 1, UK வீகன் சொஸைட்டியின் பொன்விழாவை குறிக்கும் வகையில் உலக வீகன் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற கிரேக்க கணிதவியலாளர் பித்தகோரஸ் மனிதர்கள் அனைத்து உயிரினங்களுடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதை பல வீகன்கள் சுட்டி காட்டுகின்றனர்.

உங்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுமா? அப்போ என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும்? லிஸ்ட் இதோ

எனவே நம் ஆரோக்கியம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வீகன் உணவு பழக்கம் பெரிதும் உதவுவதாக குறிப்பிடுகின்றனர். எனவே எவரும் எளிதாக பின்பற்ற கூடிய வீகன் பழக்கத்தை கடைபிடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் மேம்படுத்த நவம்பர் 1 உலக வீகன் தினம் கொண்டாடப்படுகிறது.



கருப்பொருள்..

உலகம் முழுவதும் வீகன் தினம் பல வழிகளில் அனுசரிக்கப்படுகிறது. சிறிய அளவிலான கார்னிவெல்கள், சமையல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உலக வீகன் தினம் 2021-க்கான தீம் "vegan for the less" என்பதாகும். இதன் பொருள் வீகன் டயட்டைபின்பற்ற அல்லது சாப்பிட மக்கள் அதிகம் பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்பதை குறிக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: