உலக உணவு பாதுகாப்பு தினம்: ஆரோக்கியமான வாழ்விற்கு தேவை ஆரோக்கியமான உணவுமுறை!

தடுப்பூசி, கொரோனா நடத்தை விதிமுறைகள் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் முக்கியமே...

தடுப்பூசி, கொரோனா நடத்தை விதிமுறைகள் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் முக்கியமே...

  • Share this:
ஆண்டுதோறும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். உணவுப்பழக்க நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு, மேலாண்மை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று உலக மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தற்போது வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி, கொரோனா நடத்தை விதிமுறைகள் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் முக்கியம். அந்த வகையில், கடந்த ஒரு வருடமாக மக்களிடையே பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவமும் பிரபலமாகி வருகின்றன. துரித உணவுகளால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் பற்றியும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று உலக உணவு பாதுகாப்பது தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் உருவான வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

உலக உணவு பாதுகாப்பு தினத்தின் வரலாறு:

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் சில உணவால் பரவும் நோய்களைத் தடுத்து இறுதியில் அவற்றை ஒழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூட்டு முயற்சி ஆகும். உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் சுகாதார அபாயங்களை அகற்ற பிற உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலக உணவு பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவம்:

சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிக மோசமான தேவை கொரோனா நெருக்கடியில் நிலவுவதை போல முன்னெப்போதும் இருந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, உணவுப்பழக்க நோய்கள் பரவுவதை அகற்றுவது, விவசாய களங்களில் ஆரோக்கியமான, சுகாதாரமான நடைமுறைகளை வளர்ப்பது, சந்தை மற்றும் உணவு பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய எல்லா இடங்களிலும் இது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக உணவுப் பாதுகாப்பின் முயற்சி எப்போதுமே உலகெங்கிலும் உணவு மூலம் நோய்களின் அபாயங்களைத் தணிப்பதாகும். உலக உணவுப் பாதுகாப்பு தினத்தில் சில முக்கிய குறிக்கோள்கள் நிறைவேற்றப்படும். அவை,
 உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகளை வழங்குதல்.

அனைத்து துறைகளிலும் மேம்பட்ட உணவு பாதுகாப்பிற்கான கூட்டு அணுகுமுறைகளை வழங்குதல்.

தொற்று நோய்களை சிறப்பாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிதி அளித்தல்; மற்றும் இறப்புகளை தடுப்பது போன்றவை அடங்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உணவு பாதுகாப்பு என்பது அனைவரின் வணிகமாகும். 200 வகையான உணவுப்பொருள் நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், பாக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. புள்ளிவிவர தகவல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 மில்லியன் மக்கள் இத்தகைய உணவு வகை நோய்களுக்கு இரையாகின்றனர் என்பதைக் காட்டுகிறது. சுகாதாரமற்ற உணவு நுகர்வு காரணமாக 5 வயதுக்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடும் பிரிவுகளை சேர்ந்த குழந்தைகள் நோய்களுக்கு ஆளாகின்றன. அறுவடை, பதப்படுத்துதல், சேமித்தல், நுகர்வுக்கு விநியோகித்தல் போன்ற கட்டங்களிலிருந்து உணவைப் பாதுகாப்பதற்கான முழுமையான அணுகுமுறையை உணவுப் பாதுகாப்பு உட்படுத்துகிறது.

உலக உணவு பாதுகாப்பு தினத்திற்கான ‘தீம்’:

இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் ‘ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இன்று பாதுகாப்பான உணவு’ என்பதாகும். இது மனிதர்களுக்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் சரியான வகையான உணவை உட்கொள்வதை ஊக்குவிக்கும்.
Published by:Archana R
First published: