இன்று உலக முட்டை தினம்... முட்டை சாப்பிடுவதால் இருக்கும் நன்மைகள் இதோ...

இன்று உலக முட்டை தினம்... முட்டை சாப்பிடுவதால் இருக்கும் நன்மைகள் இதோ...
  • News18
  • Last Updated: October 11, 2019, 7:06 AM IST
  • Share this:
அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

1996-ம் ஆண்டு முதல் வருடம்தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும் அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்கு உணர்த்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான்.

எனவே, வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ ஆகியவற்றுடன் கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.


ஒரு கோழி முட்டையில் 80 கலோரி சத்து இருக்கிறது. முட்டையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் கலோரி சத்து குறைவதில்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக் கருவில் இருக்கிறது. தினமும் 300 மில்லி கிராம் கொழுப்புச் சத்து ஒருவருக்குத் தேவைப்படுகிறது. முட்டையில் DHAஎன்னும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது.

Also watch

First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்