ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World Egg Day 2022 : நாட்டுக்கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை... இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது..?

World Egg Day 2022 : நாட்டுக்கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை... இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது..?

நாட்டுக்கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை

நாட்டுக்கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை

தினமும் 1 முட்டை சாப்பிட்டு வருவதும் நல்ல உணவு பழக்கம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. சரி, முட்டை என்றால் எந்த முட்டை நல்லது என்று நமக்கு ஒரு கேள்வி வருகிறது. பிராய்லர் முட்டை நல்லதா அல்லது நாட்டு கோழி முட்டை நல்லதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. எது அதிக நன்மைகளை கொண்டுள்ளதோ அதை தான் நாம் தேர்வு செய்வோம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1996 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அதுகுறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகிறது.

நாம் சாப்பிட கூடிய உணவுகளில் பல, ஆரோக்கியமற்றதாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இதை பற்றி நாம் அறிந்திருப்பது இல்லை. எந்த ஒரு உணவு வகையாக இருந்தாலும் அதற்கு மாற்றான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகள் நிச்சயம் இருக்கிறது. சில காலமாக பிரவுன் பிரட், பிரவுன் சுகர், கோதுமை பாஸ்தா, முழு தானியா உணவு வகைகள் போன்றவற்றை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதைத் தேடி மக்கள் கூட்டம் செல்ல தொடங்கி உள்ளது. இதே போன்று பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கிய உணவுப் பொருள் முட்டையாகும்.

சாதாரண மனிதரும் முட்டையை வாங்கி சாப்பிட முடியும். அந்த வகையில் விலை மலிவானது. முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் 1 முட்டை சாப்பிட்டு வருவதும் நல்ல உணவு பழக்கம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. சரி, முட்டை என்றால் எந்த முட்டை நல்லது என்று நமக்கு ஒரு கேள்வி வருகிறது. பிராய்லர் முட்டை நல்லதா அல்லது நாட்டு கோழி முட்டை நல்லதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. எது அதிக நன்மைகளை கொண்டுள்ளதோ அதை தான் நாம் தேர்வு செய்வோம். இந்த பதிவில் இவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

முட்டையின் வேறுபாடுகள் : முட்டைகயின் தோற்றத்தை, குறிப்பாக நிறத்தை எடுத்து கொண்டால் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பழுப்பு நிறத்தை கொண்ட நாட்டு கோழி முட்டைகள் உள்ளன. அதே போன்று வெள்ளை நிறத்தை கொண்ட பிராய்லர் கோழி முட்டைகளும் உண்டு. இவற்றின் மஞ்சள் கருவானது வெள்ளை நிற முட்டைகளில் உள்ள மஞ்சள் தோற்றத்தைப் போலல்லாமல் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

Also Read : ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு... பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

பழுப்பு நிற முட்டைகளின் ஓட்டில் வெள்ளை நிற முட்டைகளில் இல்லாத நிறமி கூடுதலாக உள்ளது. இந்த இரண்டு முட்டைகளையும் ஒப்பிடும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஊட்டச்சத்துகள் தான். இரண்டு வகை முட்டைகளிலும் ஒரே அளவு சத்துக்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியத்தை தரக் கூடும்.

ஒரு முட்டையில் புரதம், ஜிங்க், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பழுப்பு மற்றும் வெள்ளை முட்டைகள் இரண்டும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் முட்டையின் நன்மைகளைப் பொறுத்தவரை, இரண்டும் ஒரே அளவில் உள்ளன. பெரும்பாலும் பழுப்பு நிற முட்டைகளை ஆர்கானிக் முட்டைகள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் இது ஒரு கட்டுக்கதையாக உள்ளது.

Also Read : வெங்காய தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா..? இனி தூக்கி போடாதீங்க...

இவற்றின் சுவையை பொறுத்த வரை, பழுப்பு நிற முட்டைகள் வெள்ளை முட்டைகளிலிருந்து வித்தியாசமான சுவை கொண்டவையாக இருக்கும். வெள்ளை லெகார்ன் கோழி இனங்கள் வெள்ளை ஓடுகளை கொண்ட முட்டைகளை இடுகின்றன. அதே சமயம் பிளைமவுத் ராக்ஸ் மற்றும் ரோட் ஐலண்ட் ரெட்ஸ் போன்ற மற்ற கோழி இனங்கள் பழுப்பு நிற ஓடுகளை கொண்ட முட்டைகளை இடுகின்றன. பழுப்பு நிற முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிகளுக்கு சிறந்த உணவு வழங்கப்படுவதால், வெள்ளை நிற கோழியின் முட்டையை விட பழுப்பு நிற முட்டையின் விலை அதிகமாக உள்ளது. எனவே வெவ்வேறு கோழிகளுக்கு ஒரே மாதிரியான உணவை அளித்தால், இவற்றின் சுவையும் ஒரே மாதிரி இருக்க கூடும்.

First published:

Tags: Egg