முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலக சீஸ் தினம் : வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி?

உலக சீஸ் தினம் : வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி?

உலக சீஸ் தினம்

உலக சீஸ் தினம்

இனி உங்கள் வீட்டில் வகை வகையான சீஸ் உணவுகள்தான்..!

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இன்று உலக சீஸ் (பாலாடைக் கட்டி) தினம் என்பதால் ஆங்காங்கே சீஸ் பிரியர்கள் சீஸிலேயே பல வகையான உணவுகளை சமைத்து அசத்துகின்றனர். என்னதான் சீஸ் விருப்பமானது என்றாலும் அது சற்று விலை கூடுதலானதும் கூட. அடிக்கடி வாங்கவும் தயக்கம் இருக்கலாம். இனி அந்த தயக்கம் வேண்டாம். உங்கள் பணத்தையும் சேமிக்கலாம். வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பனீர் - 150 கிராம்

அடித்த முட்டை - 3 ஸ்பூன்

உப்பு கலந்த வெண்ணெய் - 200 கிராம்

பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு ஏற்ப

செய்முறை:

பனீரை உடைத்து தூளாக்கிக்கொள்ளவும். அதில் அடித்த முட்டையை ஊற்றவும். பின் உப்பு கலந்த வெண்ணெய் சேர்க்கவும். அடுத்ததாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இந்தக் கலவையை தற்போது நன்கு பிசைந்துகொள்ளவும்.

தற்போது அகலமான பாத்திரத்தில் மற்றொரு பாத்திரம் வைக்கும்படியாகத் தண்ணீர் ஊற்றவும். காரணம், இவ்வாறு செய்வதால் சீஸ் கிளறும்போது அடிப்பிடிக்காது.

தண்ணீர் நன்கு கொதிக்கும்போது மற்றொரு பாத்திரத்தை அதில் வைக்கவும்.

இன்று உலக சீஸ் தினம்... சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...?

தற்போது பிசைந்த பனீர் பேஸ்டை அதில் போட்டு நன்கு கிளறவும். இடைவெளியின்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் உருகி பேஸ்ட் வடிவில் சீஸ் பதத்திற்கு வரும். பின் அதை ஒரு டப்பாவில் அடைத்து ஃபிரிஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிக்க :

இன்று உலக சீஸ் தினம்... சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Cheese, Cookery tips, World cheese day