முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / World Breastfeeding Week 2021 | பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் செக்-லிஸ்ட்..!

World Breastfeeding Week 2021 | பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் செக்-லிஸ்ட்..!

நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் குறித்து உங்களுக்கு பல தவறான கருத்துகள் இருக்கலாம்.

நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் குறித்து உங்களுக்கு பல தவறான கருத்துகள் இருக்கலாம்.

நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் குறித்து உங்களுக்கு பல தவறான கருத்துகள் இருக்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தைக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது குழந்தைக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட அனுமதிக்கும் ஆன்டிபாடிகளை கொண்டுள்ளது என்பதால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாகும்.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வோம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். ஆனால், தாய்மார்கள் பலருக்கும் உணவில் என்ன சேர்க்க வேண்டும் மற்றும் சேர்க்க கூடாது என ஒரு பட்டியலே பின்பற்றப்படுகிறது. ஏனெனில் தாய்மார்களின் உணவுப் பழக்கம் தாய்ப்பால் உற்பத்தியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் பல உண்மைக்கு புறம்பான விஷயங்களும் பின்பற்றப்படுகிறது. மகப்பேறு மருத்துவர் பருல் சாத்தே தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

நீங்கள் உங்கள் முதல் குழந்தைக்கு அம்மாவா? வாழ்த்துக்கள்! நீங்கள் தாய்மையின் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளீர்கள். இப்போது நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் குறித்து உங்களுக்கு பல தவறான கருத்துகள் இருக்கலாம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு செரிமான பிரச்சினைகள் அல்லது ஒவ்வாமைகளைத் தடுக்க சில உணவுகளைத் தவிர்ப்பது உங்களுக்கு கட்டாயமாக இருக்கும் . அதேபோல, போதிய தூக்கம் இல்லாவிடில் பகலில் தூக்கம் வரும், இதனால் குழந்தைக்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்ய முடியாது. இங்கு நீங்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் குறித்து காண்போம்.

உங்களுக்கான ஊட்டச்சத்து குறிப்புகள்:

வெந்தய விதைகள்: வெந்தய விதைகள் கேலக்டாகோகஸ் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற சத்துகள் நிரம்பியுள்ளன. இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படுபவர்கள் தினமும் வெந்தயம் சாப்பிடலாம். வெந்தயதை ஊறவைத்து அந்த நீரை அருந்தியும் வரலாம்.

பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் விதைகளில் ஈஸ்ட்ரோஜன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவரை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். அதுபோல பூண்டு, கீரை, முட்டைக்கோஸ், மற்றும் கீரைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இவற்றில் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

சீரகம்: சீரக விதைகள், எள் விதைகள், துளசி, பார்லி போன்றவற்றில் வைட்டமின்கள், கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

மேலும், இனிப்பு உருளைக்கிழங்கு, பாதாம், சால்மன் மீன் மற்றும் பால் போன்றவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் அவசியமாகும். பாதாமில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, சால்மனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இரண்டு பழங்களை சாப்பிட மறக்காதீர்கள். சிட்ரஸ் நிறைந்த உணவுகள் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. இஞ்சி, ஓட்ஸ், பப்பாளி, முளை கட்டிய பயறு வகைகள் , முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மீன்களை தினமும் சாப்பிடுங்கள். நெய் சேர்த்து அடிக்கடி சாப்பிடலாம். இது தாய்மார்களை பலப்படுத்தும் மற்றும் தாய்ப்பாலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

தவிர்க்க வேண்டிவை :

தாய்மார்கள் காரமான உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், காஃபின், புகைப்பிடிப்பது மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அறவே தவிர்த்து விடுவது நல்லது. இவை பால் உற்பத்தியைத் தடுக்கலாம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூங்கம் :

உணவைப் போலவே, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஒரு நல்ல இரவு தூக்கம் உங்கள் பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்ள போதுமான சுறுசுறுப்பாக இருப்பதை உறுதி செய்யும்.

புதிய அம்மாக்கள் பெரும்பாலும் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் தாய்ப்பால் கொடுக்கும் போது பல தாய்மார்கள் விழித்திருக்க சிரமப்படுகிறார்கள். மேலும், நாள்பட்ட மன அழுத்தம் தூக்கமின்மையை அதிகரிக்கலாம். எனவே, பாலூட்டும் தாய்மார்கள் சோர்வடையாமல் இருக்க அதிகபட்சம் 8 மணிநேரம் நன்றாகத் தூங்க வேண்டும். குழந்தை எழுந்திருக்கு முன் நீங்கள் உறங்குங்கள், அந்த நேரத்தில் வீட்டில் இருப்பவர்களை வீட்டு வேலைகளுக்கு உதவுமாறு கேளுங்கள்.

First published:

Tags: Breastfeeding, Breastfeeding Diet, Healthy Food, Healthy Lifestyle, World breastfeeding week