முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தேநீர் நேரத்தை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த சுவையான 6 வகை பானங்களை டிரை பண்ணுங்க!

தேநீர் நேரத்தை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த சுவையான 6 வகை பானங்களை டிரை பண்ணுங்க!

தேநீர்

தேநீர்

இது நோயெதிர்ப்பு அமைப்பு, குமட்டல் எதிர்ப்பு, காஃபின் இல்லாத மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குளிர்காலம் ஆரம்பமானதும் நாம் நம் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த பருவத்தில் தான் அதிக பனி காரணமாக சளி மற்றும் இருமல் பிரச்சனை ஏற்படும். செரிமான கோளாறுகள் வரும். அதேபோல உடலில் நோய்எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்த நிலையில், நமது உடல் வெப்பநிலையை சூடாக வைப்பதோடு, ஆரோக்கியமாக வைத்திருப்பதும் அவசியம். அப்படியானால், உங்கள் தினசரி தேநீர் வேளையை சிறிது ஆரோக்கியமானதாக மாற்றலாமே.

ஆம், தினசரி டீ குடிப்பதற்கு பதிலாக இயற்கையான மூலகையால் செய்த டீ-க்கு நம் வழக்கத்தை மாற்றிக்கொண்டால் உடல் நலம் மேம்படும். சூடான பானங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். எனவே நல்ல தூக்கம் முதல் செரிமான ஆரோக்கியம் வரை பல ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்த பருவத்தில் பருகக்கூடிய சில சுலபமான தேநீர் வகைகளை ஊட்டச்சத்து நிபுணர் மினாக்ஷி பெட்டுகோலா நம்மோடு இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


ஊலாங் தேநீர் :

உங்கள் கவனத்தை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை அடக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும் மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் கேடசின்கள் மற்றும் திஃப்ளேவின்கள் ஊலாங் தேநீரில் உள்ளன.

செம்பருத்தி தேநீர் :

வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்த தேநீர் தான் இது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இது உதவும். உடலின் ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் இதில் காஃபின் கிடையாது. உங்கள் சருமத்திற்கும் சிறந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஞ்சி தேநீர் :

இது நோயெதிர்ப்பு அமைப்பு, குமட்டல் எதிர்ப்பு, காஃபின் இல்லாத மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஆதரிக்கிறது. இந்த தேநீர் மிகவும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

பச்சை தேயிலை தேநீர் :

சரும ஆரோக்கியம் முதல் மனநிலையை அதிகரிப்பது வரை க்ரீன் டீ ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இதில் உள்ள கேடசின்கள் உங்களுக்கு நிறைய நன்மைகளை தருகின்றன. மேலும் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன.

கெமோமில் தேயிலை :

இது சிறந்த தூக்கத்தை ஊக்குவிப்பதற்கும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். இந்த தேநீரை பெருகும் போது நிதானமாகவும், இனிமையானதாகவும் உணரலாம். படுக்கை நேரத்திற்கு முன்பு இதனை பருகுவது சிறந்தது.

சுகர் பிரச்சனைக்கு கிராம்பை இப்படி சாப்பிட்டால் மிகவும் நல்லதா..? நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!

மிளகுக்கீரை தேநீர் :

செரிமான எரிச்சலை குறைக்க இந்த தேநீர் உதவுகிறது. டென்ஷன் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது. உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. அடைபட்ட சைனஸிலிருந்து விடுபட சிறந்த தேர்வாகும்.

மேற்கண்ட தேநீர் வகைகள் தற்போது பல்வேறு பிராண்டுகளில் கிடைத்து வருகிறது. நீங்கள் நிறைய தேநீர் அருந்துபவராக இருந்தால், தேயிலை பைகளில் கலந்திருக்கும் ஈயம் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கனரக உலோகங்களின் அளவை கவனிக்க வேண்டும். மேலும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து பகிர்வது நல்லது என நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.

First published:

Tags: Ginger Tea, Green tea, Health Benefits, Herbal Tea