முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒற்றை தலைவலி முதல் எடை குறைப்பு வரை... தினமும் காலை இந்த டீ குடியுங்கள்..!

ஒற்றை தலைவலி முதல் எடை குறைப்பு வரை... தினமும் காலை இந்த டீ குடியுங்கள்..!

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

எடை குறைப்பதற்காக நீங்கள் இந்த பானத்தைக் குடிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இதனுடன் எலுமிச்சை சேர்க்க வேண்டும். இது உங்களின் உடல் நலத்திற்குப் பயனுள்ளதாக உள்ளது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காலையில் எழுந்ததுமே டீ கப்பில் தான் முழிக்க வேண்டும் என்ற நினைப்பு பலருக்கு உண்டு. அப்படி குடித்தால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இருக்க முடியும் என்ற எண்ணம். அதிலும் தற்போது வாட்டி வதைக்கும் குளிரில் சூடான டீ குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் அளவுக்கு அதிமாக டீ குடிப்பதால் பல உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படும். இனி அந்த பேச்சுக்கே இடமில்லை.

காலையில் டீ குடிப்பதற்கு மாற்றாக வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பானம் உங்களுக்கு குளிருக்கு இதமாக அமையும். இதோடு ஒற்றைத் தலைவலி, எடை இழப்பு உள்பட நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன பொருள்கள் தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

குளிர்காலத்திற்கு ஏற்ற பானம்:

உடல் நலம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் காலையில் நீங்கள் குடிக்கும் டீ அல்லது காபிக்கு மாற்றாக சீரகம், கறிவேற்பிலை, கொத்தமல்லி சேர்த்து தயாரிக்கப்படும் டீடாக்ஸ் பானத்தைப் பருகுங்கள். இது நிச்சயம் உங்களது உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் அமையும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

தேவையானப் பொருள்கள்:

2 கிளாஸ் - தண்ணீர்

7-10 - கறிவேப்பிலை

1/2 ஸ்பூன் - ஓமம்

1 டீஸ்பூன் - கொத்தமல்லி விதைகள்

1 டீஸ்பூன் - சீரகம்

1 டீஸ்பூன் - ஏலக்காய் தூள்

1-இன்ச் இஞ்சி துண்டு (துருவியது).

செய்முறை:

மேற்கூறியுள்ள அனைத்து மசாலாப் பொருள்களையும் தண்ணீரில் கலந்து 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வடிகட்டி அப்படியே குடிக்கலாம் இல்லை தேவைப்பட்டால் சிறிதளவு சர்க்கரை கலந்து பருகலாம்.

எடை குறைப்பதற்காக நீங்கள் இந்த பானத்தைக் குடிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இதனுடன் எலுமிச்சை சேர்க்க வேண்டும்.

இது உங்களின் உடல் நலத்திற்குப் பயனுள்ளதாக உள்ளது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள் உடல் நலத்திற்கு எப்படி பயனுள்ளதாக உள்ளது? என்பது குறித்தும் தெரவிக்கப்பட்டுள்ளது. இதோ அதன் தகவல்கள் இங்கே.

கறிவேப்பிலை : முடி உதிர்தல் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதோடு இரத்த அளவை மேம்படுத்தவும் மற்றும் எடை இழப்பிற்கும் உதவியாக உள்ளது.

ஓமம் : வீக்கம், அஜீரணம், இருமல், சளி, நீரழிவு, ஆஸ்துமா மற்றும் எடை இழப்பிற்கு உதவுகிறது.

சீரகம் : இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தல், ஒற்றைத் தலைவலி, கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு உதவுகிறது.

ஏலக்காய் : குமட்டல், ஒற்றைத்தலைவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தோல் மற்றும் சரும பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது.

இஞ்சி : குளிர்காலத்தில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. வாயு, பசியின்மை, எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது.

Also Read : சளியை சட்டுனு விரட்ட துளசி, புதினா டீயை குடிங்க.!

இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் இனிவரும் காலங்களில் டீ மற்றும் காபிக்குப் பதிலாக இந்த டீடாக்ஸ் பானத்தைப் பருகுங்கள். நிச்சயம் நல்ல ரிசஸ்ட் கிடைக்கும்.

First published:

Tags: Bloating, Herbal Tea, Migraine Headache, Weight loss