குளிர்காலத்திற்கு ஏற்ப சிக்கனை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்! சுவை வேறமாதிரி இருக்கும்

குளிர்காலத்திற்கு ஏற்ப சிக்கனை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்! சுவை வேறமாதிரி இருக்கும்

வெந்தயக் கீரை சிக்கன்

குளிர்காலங்களில் சாதாரணமாக சமைத்து சாப்பிடுவதை விட சில ஆரோக்கியமான வகையில் வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்.

  • Share this:
குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் எளிதில் பரவும் என்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், குளிர்காலத்தில் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் குளிர்காலத்தில் சாப்பிட பல்வேறு விருப்பங்கள் உள்ளன.

இருப்பினும், சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை சாப்பிடுவது சிலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் குளிர்காலங்களில் சாதாரணமாக சமைத்து சாப்பிடுவதை விட சில ஆரோக்கியமான வகையில் வித்தியாசமாக செய்து சாப்பிடலாம். அத்தகைய ஒரு பருவகால பிரதான உணவு தான் மெத்தி அல்லது வெந்தய கீரை. இது கசப்பாக இருந்தாலும் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் இதனை உணவில் சேர்த்தால் அதன் சுவை அபாரமாக இருக்கும். அப்படியானால் வெந்தய கீரை சிக்கன் எப்படி செய்வது என்பது பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள்:

கோழி கறி – 1/2 கிலோ
வெந்தய கீரை – 2 கப் அளவு
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
தயிர் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டிசெய்முறை:

கனமான அடிப்பாகம் கொண்ட கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கோழி கறி, தயிர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தனியா, சீரகம், மிளகாய், மஞ்சள் சோம்பு தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்.

இன்னைக்கு என்ன சமையல்..? குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான காலை உணவுப் பட்டியல் இதோ...

அதனுடன் அரைத்து வாய்த்த தக்காளி மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும். வறுவல் போல் வேண்டுமானால் தண்ணீரை குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னர் 15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.

இறுதியாக வெந்தய கீரை, கரம் மசாலா சேர்த்து கிளறவும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து சூடாக பரிமாறலாம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published: