Home /News /lifestyle /

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 2 பொருட்களை சாப்பிடுவது அவசியம் : ஆயுர்வேத நிபுணரின் டிப்ஸ்

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 2 பொருட்களை சாப்பிடுவது அவசியம் : ஆயுர்வேத நிபுணரின் டிப்ஸ்

குளிர்கால உணவுகள்

குளிர்கால உணவுகள்

குளிர்காலம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதனால் சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்கள் உணவு முறைகளையும் மாற்றிக்கொள்வது அவசியம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
குளிர்காலம் உங்களுக்கு கதகதப்பான உணர்வை தரும் என்றாலும் அது உடலுக்கு சில உபாதைகளையும் தரும். குளிர்காலம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதனால் சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்கள் உணவு முறைகளையும் மாற்றிக்கொள்வது அவசியம். அப்போதுதான் உடல் தன்னை தாக்கும் தொற்றுகள், தொந்தரவுகளை எதிர்த்து போராட உதவும். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு சிறந்த வழி உலர் பழங்களை சாப்பிடுவதுதான்.

இதை ஆயுர்வேத மருத்துவர் தீக்சா பவ்சார் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் தினசரி சாப்பிட வேண்டிய முக்கியமான உலர் பழங்கள் என்னென்ன..? அதனால் கிடைக்கும் நன்மைகள், ஊட்டச்சத்துகள் என்னென்ன என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.




அவர் பரிந்துரைக்கும் பாதாம் மற்றும் உலர் திராட்சைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

காலையில் உங்களை உற்சாகமாக உணர வைக்கும்.

இது உங்கள் பசி தூண்டுதலை குறைக்கிறது.

மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

குளிர்காலத்தில் பிஸ்தாவை ஏன் ஸ்நாக்ஸாக சாப்பிட வேண்டும்?

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது (பாதாம்
நினைவாற்றலுக்கு நல்லது ).

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், தோல் மற்றும் முடிக்கு இது மிகவும் நல்லது.

இதயத்திற்கும் நல்லது (இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது).

உங்கள் அமிலத்தன்மையை தடுக்கிறது.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Dry Fruits, Winter diet

அடுத்த செய்தி