Home /News /lifestyle /

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பழங்களை இப்படித்தான் சாப்பிட வேண்டும் : மீறினால் என்ன ஆகும்..?

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பழங்களை இப்படித்தான் சாப்பிட வேண்டும் : மீறினால் என்ன ஆகும்..?

பழங்கள்

பழங்கள்

இன்றைய காலத்தில் பலருக்கும் கண்டரியபடாத இன்சுலின் சென்சிடிவிட்டி இருக்கிறது. அதே போல, மாதவிடாய் காலத்தில் குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

ஊட்டச்சத்து நிறைந்த சுவையான இயற்கை உணவுகளில் பழங்களுக்குத்தான் முதலிடம். ஒரு சில பழங்களின் தோற்றமும் வாசமுமே பசியைத் தூண்டும். அது மட்டுமின்றி பழங்களை எவ்வளவு சாப்பிட்டாலும் ஆரோக்கியத்துக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் பழங்களை சாப்பிடுவதற்கென்று கூறி சில வழிமுறைகள் உள்ளன.

குறிப்பிட்ட நேரத்தில்தான் பழங்களை சாப்பிட வேண்டும், ஒரு சில உணவுகளுக்கு பிறகு அல்லது உணவுடன் சேர்த்து பழங்களை சாப்பிடக்கூடாது. பழங்களை எப்படி சாப்பிடுவது சரியான முறை என்பது பற்றியும் இனிப்பான பழங்களை பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர் வழங்கிய விளக்கங்கள் இங்கே.

கார்ப் சென்சிடிவிட்டி இருந்தால் பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்..?


இயற்கையாகவே இனிப்பு சத்து அதாவது சர்க்கரை நிறைந்திருக்கும் பழங்களை உங்கள் உடலை கூட்டமாகவும். அதே நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க்கு முன்பான நாட்களில் கார்ப் உணவுகளை கவனமாக சாப்பிடும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், மாவுச்சத்து நிறைந்த உணவுகளுடன் பழங்கள் சாப்பிடுவது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். அதே போல, எண்டோமட்ரியோசிஸ் மற்றும் PCOS பிரச்சனைகள் இருப்பவர்களும் பழங்களை குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.



பழங்களை அப்படியே சாப்பிட விருப்பம் இல்லை என்றால், கோகோனட் கிரீம் சேர்த்து குளிர்வித்து சாப்பிடலாம். வாழைப்பழம், தேங்காய் கிரீம் மற்றும் மாம்பழம் ஸ்மூத்தி மிகவும் சுவையான பானமாகும்.

தினமும் கைப்பிடி அளவு நட்ஸ் & சீட்ஸ் சாப்பிடலாம். சாப்பிட பிறகு, இனிப்புக்கு பதிலாக பழங்கள் சாப்பிடலாம்.

சர்க்கரையை தவிர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான மாற்று வழிகள் இங்கே...

இன்றைய காலத்தில் பலருக்கும் கண்டரியபடாத இன்சுலின் சென்சிடிவிட்டி இருக்கிறது. அதே போல, மாதவிடாய் காலத்தில் குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். எனவே, சீசனல் பழங்கள் சாப்பிட்டாலும், அதில் அதிக நார்ச்சத்து இருந்தாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்க முடியவில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.



பழங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

பருவ நிலைக்கு ஏற்றது போல, இயற்கையாகவே ஒரு சில பழங்கள் அதிக அளவில் விளையும். ஆனால், அதிக வியாபாரம் செய்ய வேண்டும் என்றார் காரணத்துக்காக, ரசாயனங்கள் பயன்படுத்தி பழங்களை முன்கூட்டியே பழுக்க வைக்கும் உத்திகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

டீ குடிக்கும்போது இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும்..?

குறைவான கிளைகெமிக் இன்டக்ஸ் (GI) உள்ள பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு low GI உணவுகளை சாப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், அனைவருக்குமே ரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெரி, திராட்சை போன்ற பழங்களை low GI கொண்டவை மற்றும் சப்போட்டா, மாம்பழம், பலா போன்றவை high GI கொண்டவை ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fruits, Health tips

அடுத்த செய்தி