முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாதுனு சொல்றதுக்கு இதுதான் காரணமாம்..

காட்சி படம்

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது.

 • Share this:
  முட்டை புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இதன் காரணமாக நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து குளிர்சாதன பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்காக ஒரு தனி ட்ரேவை வழங்குகின்றன. ஆனால் ஒரு ஆய்வின்படி, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது.

  குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும். பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டுவிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர்ந்த நிலை முட்டை ஓட்டில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பின்பு இது முட்டை கருவிலும் பரவக்கூடும் என்பதால் நுகர்வுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. முட்டைகளை குளிரூட்டுவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதால், முட்டைகள் கெட்டுப் போகாமல் இருப்பதோடு, சால்மோனெல்லா எனப்படும் தூண்டப்பட்ட உணவு விஷத்தைப் பெறுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது என்று நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது.

  ஆனால் இந்த புதிய ஆய்வு முற்றிலும் நேர்மறையாக ஒரு தகவலை தெரிவித்துள்ளது. அதிலும், அறை வெப்பநிலையில் முட்டைகள் சிறந்த முறையில் சேமிக்கப்படுகின்றன என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். முட்டைகளை மிகவும் குளிரான வெப்பநிலையில் சேமிப்பது, அதாவது குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவற்றை சாப்பிட முடியாததாக மாற்றும் என தெரிவித்துள்ளனர். கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது தான்.  இதனால் முட்டை கெடாமல் இருக்க அதனை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி, அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது. இதன் விளைவாக அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. மேலும் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. சாதாரண அறை வெப்பத்தில் இந்த பாக்டீரியாவால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

  Also Read : 'பிளாக் காபி' உடல் எடையை குறைக்க உதவுமா..?  அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பல ஆய்வுகளின்படி சிறந்த உட்கொள்ளலுக்கு அறை வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் குளிரூட்டப்பட்டதை விட வேகமாக அழுகாது. சிறந்த சுவையைத் தரும். இருப்பினும் நீங்கள் முட்டைகளை அதிக காலத்திற்கு அரை வெப்பநிலையிலோ அல்லது பிரிட்ஜிலோ வைத்திருக்கக்கூடாது. வாங்கிய அனைத்தையும் ஓரிரு நாட்களிலேயே சமைத்துவிட முயற்சிக்க வேண்டும்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: