இப்படி பூண்டும் , வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இந்த இரண்டும் அல்லியம் குடும்பம் என்று கூறப்படுகிறது.இவை இரண்டையும் சாப்பிடுவதால் கொழுப்பு கரையும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இரத்த அழுத்தம் குறையும், புற்றுநோய், நாள்பட்ட வியாதிகளுக்கு உதவும் என பல வகை ஆரோக்கியங்களை அளிக்கின்றன.
also read : தீபாவளிக்கு உங்கள் வீட்டை இப்படி அலங்கரியுங்கள்.. சிம்பிள் டிப்ஸ் இதோ..
குறிப்பாக இவற்றை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது இனும் நல்லது என்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் சில பூண்டு பற்களை உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக சாப்பிடுவதால் செரிமானம் வேகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.அதேசமயம் இவ்வாறு சாப்பிடுவதால் உடலில் கெட்டக் கிருமிகள் அழிவதோடு நல்ல கிருமிகளும் அழிவதாக ஆய்வு கூறுகிறது. ஏனெனில் பூண்டு அதிக ஆன்டிபயாடிக் கொண்டதாம்.
பூண்டு மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர். சிலருக்கு அதிக பூண்டு அல்லது வெங்காயம் ஒவ்வாமையை உண்டாக்கும். அதன் அறிகுறியாக நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, வயிறு அசௌகரியம், குடல் எரிச்சல், வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இவ்வாறு நீங்கள் அடிக்கடி உணர்ந்தால் உடனே மருத்தவரை அணுகி சிகிச்சைப் பெறுதல் நல்லது.
also read : அந்தரங்க பகுதியில் இருக்கும் கருமையை நீக்க இயற்கையான முறையில் சில டிப்ஸ்..
biocybernaut நிறுவனத்தின் கூற்றுப்படி பூண்டை அதிகமாக உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது மூளைக்கு விஷம் என்கின்றனர். இதில் இருக்கும் sulphone hydroxyl ion என்னும் மூலக்கூறானது மூளை நரம்புகளுக்கு நஞ்சு விளைவிக்கக்கூடியது என்கின்றனர். இவை மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடை செய்யக் கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், பாலியல் ஆசை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் அதிகமாகும். எனவேதான் ஆயுர்வேதத்தில் பூண்டு , வெங்காயம் முற்றிலுமாக தவிர்க்கச் சொல்கின்றனர்.