Home /News /lifestyle /

எவ்வளவு காஃபி குடிக்கிறோம் என்பதை ஏன் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்..?

எவ்வளவு காஃபி குடிக்கிறோம் என்பதை ஏன் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்..?

காஃபி

காஃபி

காஃபி தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.அதுமட்டுமல்ல அதிகப்படியான காஃபின் பலவகையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை நாங்கள் சொல்லவில்லை காஃபி குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு அருமையான காலை வேளையில் ஒரு கப் சூடான காஃபியை குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. இப்படி கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே பிடித்த காஃபியின் வரலாற்றில் உண்மையியேயே குழப்பங்கள் உள்ளன. ஏனெனில் காஃபி எப்படி அல்லது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது யாருக்குமே சரியாக தெரியாது, இருப்பினும் காஃபியின் தோற்றம் குறித்த பல வகையான "கதைகளுக்கு" மட்டும் இங்கே பஞ்சேமே இல்லை.

எத்தியோப்பிய பீடபூமியில் வாழ்ந்த ஆடு மேய்ப்பவர் ஆன கல்டி தான், முதல் முதலில் காஃபி பீன்களின் "திறனை" கண்டுபிடித்தார் என்கிற ஒரு கதை உள்ளது. ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழங்களை சாப்பிட்ட பிறகு, தனது ஆடுகள் இரவில் தூங்க விரும்பாத அளவுக்கு ஆற்றல் மிக்கதாக மாறியதைக் கவனித்த பிறகே கல்டி காஃபி பீன்களை கண்டுபிடித்தார் என்கிறது அந்த கதை!

இந்த கதையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான புள்ளி என்னவென்றால் - ஆடுகள் தூங்கவில்லை என்பதே ஆகும். ஆம், அது உண்மை தான் காஃபி தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.அதுமட்டுமல்ல அதிகப்படியான காஃபின் பலவகையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை நாங்கள் சொல்லவில்லை காஃபி குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதிகப்படியான காஃபி உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்:

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்:

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் 'எஸ்ப்ரெசோவை' குடிப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். குறிப்பாக இதன் கீழ், பெண்களை விட ஆண்களுக்கே கொலஸ்ட்ராலின் அளவு வலுவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் இந்த 3 உணவுப் பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!

கவலையை அதிகரிக்கும்:

எஸ்ப்ரெசோவை அதிகமாக உட்கொள்வது நடுக்கத்தையும், சங்கடத்தையும் கூட ஏற்படுத்தலாம், இவை பொதுவாக பதட்டத்தின் அறிகுறிகளாகும். சிலருக்கு, காபி குடிப்பதால் சக்தி அதிகரிக்கும், ஆனால் நீங்கள் ஏற்கனவே கவலையாக உள்ளீர்கள் என்றால், இரண்டாவது கப் காஃபியை குடிப்பதற்கு முன் சற்றே சிந்திக்க வேண்டும்.ஹார்மோன் மாற்றம்:

அதிகப்படியான காஃபின் மனித உடலை அதிக விழிப்புடன் வைக்கலாம், அது சில ஹார்மோன் மாற்றம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுவது பெண்களுக்கு ஆபத்தானது.

பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது சங்கடத்தை தருகிறதா..? இந்த 7 உணவுகளை தவிருங்கள்..!

தூக்கமின்மை :

நமக்கு தூக்கம் வரும்போதெல்லாம், நம்மை எழுப்பும் சக்தி காஃபிக்கு உள்ளது. ஆக அதை அதிகமாக உட்கொண்டால் தூக்கம் பாதிக்கப்படும். காஃபியில் குறைந்த அளவிலான அல்லது மிதமான அளவிலான காஃபின் இருந்தால் அது நுகர்வோரின் தூக்க சுழற்சியை பாதிக்காது. அப்படியாக ஒரு நாளைக்கு ஐந்து கப் காஃபி வரை குடிப்பது பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்று நிரூபிக்கும் ஆய்வுகள் உள்ளன. ஆனாலும் காஃபியின் அதிக நுகர்வு பற்றி நிறைய கேள்விகளுக்கு இன்னும் சரியான பதில்கள் உள்ளன. காஃபி மட்டுமல்ல தேநீர், மதுபானம் என எதுவாக இருந்தாலும் எந்தவொரு பானத்தையும் மிதமாக உட்கொள்வதே நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Coffee, Insomnia

அடுத்த செய்தி