தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் பெரும்பாலானோர் அதன் தோலை தூக்கி எரிந்து விடுவார்கள். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை தூக்கி எறிய மாட்டீர்கள். வாழைப்பழ தோலிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது, இந்த தோல்கள் பூஞ்சை எதிர்ப்பு கலவை, ஆண்டிபயாடிக், ஃபைபர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே உட்புற தோலில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதியை நாம் சாப்பிடலாம்.
வாழைப்பழ தோல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
* வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள வைட்டமின் டீ12 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நரம்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.
* வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது, இது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது, வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலையும் சாப்பிட்டு வந்தால் தூக்கத்தை தூண்டுகிறது.
* வாழைப்பழத் தோலைக் கொண்டு இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்குவதோடு, புதிதாக மருக்களும் உருவாகாமல் இருக்கும்.
* வாழைப்பழ தோலில் உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா..?
* வாழைப்பழ தோல்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை, அவை அனைத்து வகையான அழற்சிகளையும் போக்க உதவும். வாழைப்பழம் தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு, பூச்சி கடித்தல், தடிப்புகள், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் குணமாவதற்கும் உதவுகிறது.
* வாழைப்பழ பழ தோல்கள் உங்கள் உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பச்சை வாழைப்பழ தோல்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.
* உங்கள் தமனியின் சுவர்களில் கொழுப்பு ஒட்டாமல் தடுப்பதன் மூலம் உங்கள் உடலில் இருந்து பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை அகற்ற வாழைப்பழ தோல்கள் உதவும்.
* உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால், வாழைப்பழத்தின் தோலை பருக்கள் அதிகம் வரும் பகுதியில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும். இதனால் முகப்பருக்கள் குறைந்து தழும்புகளும் மறையும்.
* வாழைப்பழ தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கரை நீங்கும், பல் ஆரோக்கியமும் மேம்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.