Home /News /lifestyle /

தினமும் காலை முதல் உணவாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்..!

தினமும் காலை முதல் உணவாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்..!

ஆப்பிள்

ஆப்பிள்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. பெக்டின் மற்று ப்ரிபயோடிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரே தேவையில்லை என்னும் மருத்துவ பழமொழியை பலரும் கேட்டிருக்கக் கூடும். ஆனால் எப்படி என்னும் விளக்கும் பலருக்கும் தெரிந்திக்க வாய்ப்பில்லை. ஆப்பிள் உண்மையில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை நிறைவாக கொண்டது. இப்படி அதன் நன்மகள் அதிகம் இருப்பதாலேயே ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

    healthline.com கூற்றுப்படி ஆப்பிள் நார்ச்சத்து மிகுந்தது என்பதால் உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் இதில் இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடிய polyphenols என்னும் பண்பு இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த மருந்தாக இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. பெக்டின் மற்று ப்ரிபயோடிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

    இதுமட்டுமன்றி ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால் ஆப்பிளின் நன்மைகள் குறித்து இன்ஸ்டாகிராமின் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளா. அதில் “ காலை எழுந்ததும் உங்களின் முதல் உணவாக ஆப்பிளை உட்கொண்டு வந்தால் உங்கள் ஆரோக்கியத்தில் எண்ணற்ற நன்மைகளை உணர முடியும் என்று கூறியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Nmami (@nmamiagarwal)






    மேலும் அவர் “ தினமும் காலையில் வெறும் வயிற்றில் காஃபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை இன்றே நிறுத்திவிட்டு மாற்று வழியாக ஆப்பிள் சாப்பிட தொடங்குங்கள் என்று பரிந்துரைக்கிறார்.

    ஆப்பிளில் கஃபைன் இல்லை. அதன் இயற்கையான இனிப்பு சுவை உங்கள் நாவுக்கு புத்துணர்ச்சி அளித்து மூளைக்கு உற்சாகத்தை தரும். அந்த உற்சாகம் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். காஃபியில் நீங்கள் செயற்கையான சர்க்கரை சேர்ப்பதும் கூட உங்கள் ஆற்றல் திறனை பாதிக்க நேரிடும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை பாதிப்புகளா..? உஷார்...

    இவரும் ஆப்பிளில் நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் என்கிறார். ஒருவேளை உங்களுக்கு ஆப்பிளை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை எனில் ஸ்மூத்தியாக அல்லது சாலட் போலும் சாப்பிடலாம். இல்லையெனில் ஏபிசி ஜூஸ் கூட குடிக்கலாம். இது உங்கள் சருமத்தையும் பளபளப்பாக்கும் என்று பரிந்துரைக்கிறார் நிமாமி.

     

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Apple, Diabetes, Health Benefits

    அடுத்த செய்தி