ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஏன் வைட்டமின் டி-ஐ வைட்டமின் கே உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்..?

ஏன் வைட்டமின் டி-ஐ வைட்டமின் கே உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்..?

வைட்டமின் டி-ஐ வைட்டமின் கே உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்

வைட்டமின் டி-ஐ வைட்டமின் கே உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது இன்றியமையாதது என்பது ஒருபக்கமிருக்க, கோ-சப்ளிமெண்ட் இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு நாளைக்கு எவ்வளவு அளவிலான வைட்டமின் டி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியுமா? மருத்துவர்கள் பரிந்துரையின்படி 10 - 20 மைக்ரோகிராம் ஆகும். ஆனால் நம்மில் பலரும் மருத்துவ பரிந்துரையுடன் அல்லது இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறோம்.

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது இன்றியமையாதது என்பது ஒருபக்கமிருக்க, கோ-சப்ளிமெண்ட் இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

உடல் நலத்தில் வைட்டமின் டி-யின் பங்கு என்ன?

வைட்டமின் டி கொழுப்பைக் கரைக்கக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். இது கொழுப்பு நிறைந்த மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற உணவுகளில் காணப்படுகிறது. குடலில் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிப்பதன் மூலம் வைட்டமின் டி, கால்சியம் மெட்டபாலிசத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான் எலும்பு முறிவுகளைத் தடுக்க வைட்டமின் டி அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லாதபோது, ​​வைட்டமின் டி எலும்புகளில் இருந்து இருப்புக்களை உறிஞ்சி போன் லாஸ் (Bone Loss) மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு (osteoporosis) வழிவகுக்கிறது.

வைட்டமின் டி - எப்போது ஒரு பிரச்சனையாக மாறும்?

உடலில் வைட்டமின் டி அதிகமானால், இரத்த நாளங்களில் கால்சிஃபிகேஷன் (calcification) ஏற்படும், இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும், இதய நோய்களுக்கு வழிவகுக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி வைட்டமின் சப்ளிமெண்ட்களை உட்கொள்வதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால் அதை எப்போது நிறுத்த வேண்டும் என்று மக்களுக்குத் தெரியாது. இதன் விளைவாக உடலில் வைட்டமின் டி அதிகமாக குவிந்து பின்னர் தலைகீழான வழியில் செயல்பட தொடங்கும். அதிகப்படியான வைட்டமின் டி ஹைபர்கால்சீமியாவுக்கும் கூட வழிவகுக்கும்.

மூல நோயில் இருந்து தப்பிக்க கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!

இதற்கு என்ன தான் தீர்வு?

பல ஆராய்ச்சி ஆய்வுகள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை வைட்டமின் கே உடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. வைட்டமின் டி இரத்தத்தில் கால்சியம் இருப்பதை உறுதி செய்யும் போது, ​​வைட்டமின் கே எலும்புகளில் கால்சியம் இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த இடத்தில் வைட்டமின் கே குறைபாடும் உடல் நலத்திற்கு தீங்கு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைட்டமின் கே-வும் கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் தான். ஆனால் இது இரண்டு வடிவங்களில் உள்ளது: வைட்டமின் கே1 (பைலோகுவினோன்; இது பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படுகிறது) மற்றும் வைட்டமின் கே2 (மெனாகுவினோன், இது புளித்த பாலில் காணப்படுகிறது மற்றும் குடலில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது).

வைட்டமின் கே கார்பாக்சிலேஷனுக்கு (carboxylation) உதவுகிறது. போதுமான வைட்டமின் கே இல்லாதபோது, ​​​​மேட்ரிக்ஸ் க்ளா புரோட்டீன் மற்றும் ஆஸ்டியோகால்சின் ஆகியவற்றின் அதிக அளவு 'அன்கார்பாக்சிலேடட்' ஆக இருக்கும், இது இருதய நோய், லோயர் பிஎம்டி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற சாதகமற்ற விளைவுகளுடன் தொடர்புடையது என்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு கூறுகிறது. ஒரு நாளைக்கு 70 μg என்கிற அளவில் மட்டுமே வைட்டமின் கே1-ஐ உட்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்டுகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin D, Vitamin K