தமிழர்களின் சமையல் பெரும்பாலானவற்றில் தவறாமல் இடம்பெறும் ஒரு பொருள் கொத்தமல்லி ஆகும். பெரும்பாலும் சமைத்து பிடித்த பிறகு, உணவுக்கு அழகூட்டவும், மனமூட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று கொத்தமல்லி விதைகளையும் நாம் தனியா தூள் அல்லது மல்லித்தூள் என்ற பெயரில் அனைத்து வகை சமையல்களிலும் சேர்த்துக் கொள்கிறோம்.
டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கொத்தமல்லி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் கொத்தமல்லி மற்றும் மல்லி விதைகள் இரண்டுமே பல விதமான தைராய்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன.
தைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள இந்த உறுப்பு தான் நமது மெடபாலிச நடவடிக்கைகள் தொடர்பான ஹார்மோன்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கிறது.
இந்த ஹார்மோன்களில் சீரற்ற நிலை ஏற்படுவதைத் தான் ஹைபோதைராய்டிஸம் அல்லது ஹைப்பர்தைராய்டிஸம் என்று குறிப்பிடுகிறோம். முதலாம் பிரச்சினை என்பது தைராய்டு சுரப்பி செயல்படாத நிலையை குறிப்பிடுவது ஆகும். இரண்டாவது பிரச்சினை என்பது தைராய்டு சுரப்பி மிகுதியாக வேலை செய்வதை குறிப்பிடுவதாகும்.
கொத்தமல்லி பலன் தருமா?
தைராய்டு பிரச்சினையை சமாளிக்க கொத்தமல்லி உதவிகரமாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரை செய்கிறது. கொத்தமல்லியில் உள்ள பல்வேறு பண்புக்கூறுகள், இரண்டு விதமான தைராய்டு பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகின்றன.
Also Read : குறைவான புரதம் உள்ள டயட்டை பின்பற்றினால் கேன்சர் செல்கள் வளர்ச்சி குறையும் - புதிய ஆய்வு
ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள்
கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தைராய்டு போன்ற குறைபாடுகள் மற்றும் நோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்க உதவுகிறது. பொதுவாக, பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கான மருந்தாக மல்லி விதைகள் பயன்படுகின்றன.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு
உடலில் தைராய்டு பிரச்சினை ஏற்படுவதற்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும். கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தக் கூடியது என்ற நிலையில், அதன் விளைவாக தைராய்டு பிரச்சினையும் கட்டுக்குள் வரும்.
உடல் எடை இழப்பு
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு கொத்தமல்லி விதைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். அத்துடன் உடல் எடையை குறைத்தால் தைராய்டு பிரச்சினையும் கட்டுப்படும்.
கொத்தமல்லியை எப்படி சாப்பிடலாம்..?
கொத்தமல்லியை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து தமிழர்களுக்கு விரிவாக சொல்லத் தேவையில்லை. இருப்பினும் இந்த சமயத்தில் நினைவூட்டுவது சிறப்பாகும். காலை டிபனுக்கான சட்னியில் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.
சுக்கு, கொத்தமல்லி, ஏலக்காய், வெல்லம் ஆகியவை சேர்த்து 10 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி கொத்தமல்லி காஃபி அருந்தலாம். பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் மிகுதியான பலன்கள் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.