Home /News /lifestyle /

ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகமாம்... ஏன் தெரியுமா? 

ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகமாம்... ஏன் தெரியுமா? 

உணவு

உணவு

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல் ஆகும். இது மோசமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் உளவியல் நிலைகளின் பிரச்சனையாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உடல் அமைப்பு, அழகு போன்ற வெளிப்புறத் தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்யப்படும் பிரச்சனைகளை ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் எதிர்கொள்கின்றனர். குண்டு, குட்டை, ஒல்லிக்குச்சி, பிம்பிள் ஃபேஸ் என சக பணியாளர்கள், உடன் படிக்கும் நண்பர்கள், வீட்டில் இருப்பவர்களால் கூட சகட்டுமேனிக்கு பட்டப்பெயர்கள் வைக்கப்பட்டு பெண்கள் உருவ கேலிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கேலி, கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள், மன அழுத்தத்தால் ஈட்டிங் டிஸ்ஆர்டருக்கு ஆளாகின்றனர்.

பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல் ஆகும். இது மோசமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் உளவியல் நிலைகளின் பிரச்சனையாகும்.

நேஷனல் பயோடெக்னாலஜி இன்பர்மேஷன் சென்டர் நடத்திய ஆய்வின் படி, அனோரெக்ஸியா நெர்வோசா (ஏஎன்) மற்றும் புலிமியா நெர்வோசா (பிஎன்) போன்ற பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களிடையே அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதில் அனோரெக்ஸியா நெர்வோசா என்பது உடல் எடை குறித்த அவமான எண்ணம் காரணமாக உணவைத் தவிர்த்து பட்டினி கிடப்பதையும், புலிமியா நெர்வோசா என்பது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் குறிக்கக்கூடிய மன நல பிரச்சனைகள் ஆகும். அனோரெக்ஸியா நெர்வோசாவால் பாதிக்கப்பட்டவர்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து, உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவார்கள்.



பெண்களுக்கு ஈட்டிங் டிஸ்ஆர்டர் அதிகம் ஏற்பட காரணங்கள்:

ஆண்களை விட பெண்கள் உடல் அமைப்பு சார்ந்த நிறைய நெகட்டிவ் கமெண்ட்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு தங்களது சொந்த உடல் மீது வெறுப்பு அல்லது அச்ச உணர்வு மோலோங்கும் போது, ஈட்டிங் டிஸ்ஆர்டருக்கு ஆளாகின்றனர். இது பெண்களின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.

ஆண்களை அதிகமாக பாதிக்கும் வழுக்கை பிரச்சனை : எவ்வாறு சரி செய்யலாம்..?

உதாரணத்திற்கு, அனோரெக்ஸியா நெர்வோசா என்ற மனநல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைப்பதற்காக அல்லது கவர்ச்சிகரமான தோற்றத்தில் நீடிக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பார்கள். ஒட்டுமொத்த உணவை புறக்கணித்து பட்டினி கிடக்கும் நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆனால் இதற்கு இப்படியே நேர்எதிராக புலிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதற்கு அடிமையாகியிருப்பார்கள். இதனால் உடல் பருமன் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.



அழகு சம்பந்தமான அளவு கடந்த குழப்பம்:

சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை கதையின் நாயகி என்பவள் ஸ்லிம்மாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது திணிக்கப்படுகிறது. நாவல்கள், கவிதைகள், கதைகளில் கூட பெண்களை பேரழகிய வர்ணிக்கும் போக்கே நீடிக்கிறது. இதுபோன்ற விஷயங்களை பார்க்கும், கேட்கும், படிக்கும் பெரும்பாலான பெண்கள் அதனை தங்களுடன் பொருத்தி பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அனோரெக்ஸியா நெர்வோசா (ஏஎன்) மற்றும் புலிமியா நெர்வோசா (பிஎன்) போன்ற ஈட்டிங் டிஸ்ஆர்டர்கள், உடலில் உள்ள குறைபாடுகளைப் பற்றி அதிகம் கவலை கொள்ள வைக்கும் டிஸ்மார்பிக் போன்ற மன நல கோளாறுகளுக்கு காரணமாக அமைகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Eating Disorder, Women Health

அடுத்த செய்தி