முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது என்று சொல்வதற்கு பின் இருக்கும் உண்மை என்ன..?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது என்று சொல்வதற்கு பின் இருக்கும் உண்மை என்ன..?

ஊறுகாய் - மாதவிடாய்

ஊறுகாய் - மாதவிடாய்

மாதவிடாய் நாட்களில் தனியே இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிடக்கூடாது, வெளியே செல்லக் கூடாது, தீட்டு என்று பல பழக்கவழக்கங்கள் பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன.

  • Last Updated :

மாதவிடாயைப் பொறுத்தவரை பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பதை கடந்து அதைச் சுற்றி பல்வேறு நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் இதையெல்லாம் செய்யலாம் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று பெரிய பட்டியலே இருக்கிறது. மாதவிடாய் நாட்களில் தனியே இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிடக்கூடாது, வெளியே செல்லக் கூடாது, தீட்டு என்று பல பழக்கவழக்கங்கள் பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன.

அதில் முக்கியமானது மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயைத் தொட்டால் ஊறுகாய் கெட்டுவிடும் என்பது. தற்போதும் கூட பல வீடுகளில் பெண்களுக்கு நாட்களில் காலத்தில் ஊறுகாய் தொடக்கூடாது என்ற பழக்கம் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? மாதவிடாய் காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அறிவியல் பூர்வமாக ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கடந்த கால கடந்த கால நம்பிக்கைகளின்படி மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையலறைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமைக்க மாட்டார்கள் அதுமட்டுமின்றி அவர்கள் குறிப்பாக ஊறுகாய்களை தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு தீவிரமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் மாதவிடாய் நாட்கள் தீட்டு (தூய்மையற்ற நாட்கள்) என்று என்று கூறப்பட்டது தான்.

மேலும், உணவு ஒரு புனிதமான விஷயமாகக் கருதப்படுகிறது. தூய்மை இல்லாத எந்த ஒரு விஷயமும் உணவுடன் சேரும் பொழுது உணவு கெட்டு விடும் சாத்தியம் இருக்கிறது. தற்போது கூட மாதவிடாய் நாட்களில் பல பெண்கள் சமைக்காமல் இருப்பார்கள். சரி, உண்மையிலேயே மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமைப்பதால் உணவு கெட்டுவிடுமா அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

கரு உருவாகாமல் இருக்கும் பொழுது பெண்ணின் கர்ப்பப்பைக்குள் இருக்கும் கருமுட்டை உடைந்து அதிலிருந்து ரத்தம் திரவமாக 3 – 5 நாட்கள் வரை வெளியேறும். எனவே பெண்கள் அந்த காலத்தில் தங்களை சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் இன்ஃபெக்ஷனை தவிர்க்கலாம். அனால், முன்பு பெண்கள் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கிற்கு துணியை தான் பயன்படுத்தினார்கள்.

துணியை பயன்படுத்துவது அந்த அளவுக்கு சுகாதாரமானதாக இல்லை. அதனால் சமையல் மற்றும் உணவு சம்மந்தப்பட்ட வேலைகளில் செய்யக் கூடாது என்று தனியே வைக்கப்பட்டனர். கால மாறுதலுக்கு ஏற்ப தற்பொழுது நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதனால் தொற்று ஏற்படும் அபயாமும் தற்போது குறையும்.

கூந்தலின் முனை முடியை அடிக்கடி வெட்டுவதால் வேகமாக வளருமா..? உண்மை இதுதான்..!

எனவேதான் அந்த நாட்களில் பெண்கள் சமைக்க கூடாது, மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தனித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும் தற்போது இருப்பது போல சமையலுக்கு, அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என்று எந்த இயந்திரங்களும் இல்லை. பெண்கள் தான் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார்கள். எனவே மாதவிடாய் நாட்களில் அதாவது பெண்களுக்கு ஓய்வு வேண்டும் என்றுதான் அந்த மூன்று நாட்களும் தனியே இருக்க வேண்டும் என்று கூறியதாக பலரும் கூறுகிறார்கள்.

வீட்டிலேயே குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் வீட்டிலேயே தயாரிக்கும் பழக்கம் இருந்தது, அதில் ஊறுகாயும் அடங்கும். ஊறுகாய் தயார் செய்வது என்பது கடினமான வேலைகளில் ஒன்று. அது மட்டுமின்றி ஊறுகாயை தொட்டால் கெட்டுவிடும் என்று கூறுவதற்கும் இன்னொரு காரணமும் இருக்கிறது. மாதவிடாய் நாட்களில் எளிதாக செரிமானமாகும் அளவுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். பொதுவாகவே ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக காரம் மற்றும் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே ஊறுகாயை அதிகமாக சாப்பிடும்போது ஏற்கனவே மாதவிடாய் நாட்களில் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு வயிற்று வலி அல்லது செரிமான பிரச்சனை ஏற்பட்டால் அது கூடுதலாக உடல் நலத்தை பாதிக்கும்.

இந்த காரணத்தால் ஊறுகாயை தொடக்கூடாது தொட்டால் கெட்டுவிடும் என்று கூறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஊறுகாய் கெடாமல் இருக்க டிப்ஸ்:

  • ஊறுகாய் கெடாமல் இருப்பதற்கு ஊறுகாயை காற்றுப்புகாத உணர்ந்த பாட்டிலில் அல்லது டின்னில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • ஊறுகாய் எடுக்கும் பொழுது எப்பொழுதுமே உலர்வான ஸ்பூனை பயன்படுத்த வேண்டும்.
  • ஈரக் கைகளால் ஊறுகாயை தொடக்கூடாது.
  • ஊறுகாயை சூரிய ஒளியில் உலர்த்தினால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்
  • அதுமட்டுமின்றி அதிக காரம் மற்றும் உப்பு சேர்ப்பதும் இயற்கையான பிரசர்வேட்டிவ்வாக மாறி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும்.

First published:

Tags: Menstrual time, Periods, Pickle