ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் ஏன் நூல்கோலை அதிகம் சாப்பிட வேண்டும்.? நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

குளிர்காலத்தில் ஏன் நூல்கோலை அதிகம் சாப்பிட வேண்டும்.? நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

நூல் கோல்

நூல் கோல்

இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் எடை இழப்புக்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய சத்தான உணவுகளை பற்றி பேசும் போது வெகு குறைவாக பேசப்படும் ஒரு சீசனல் காய்கறி டர்னிப் (Turnip) ஆகும். இந்த காய் தமிழில் கோசுக்கிழங்கு என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு கிரீம் வெள்ளை நிறம் மற்றும் ஊதா நிறத்தை மேலே கொண்ட காயாகும். டர்னிப்ஸ்கள் மிகவும் சத்தான காய்கறிகளாக இருக்கின்றன.

இவற்றில் கால்சியம், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காய்களில் அடங்கி இருக்கும் பல ஊட்டச்சத்துக்கள் குளிர்காலத்தில் நம் உடலுக்கு ஊட்டமளிக்க உதவுகின்றன.

இந்த காய்களின் வேர் மற்றும் இலை கீரைகள் இரண்டும் உண்ண கூடியவை. உங்கள் குளிர்கால டயட்டில் டர்னிப்ஸ்களை சேர்க்க முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.

குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு...

ஃபைபர் சத்து நிறைந்த இந்த காய் பெருங்குடலில் ஏற்படும் அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. குறிப்பாக அதிக நார்ச்சத்து அடங்கிய உணவுகள் டைவர்டிகுலிடிஸ் (diverticulitis) உள்ளிட்ட குடல் பிரச்சனைகளின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது. diverticulitis என்பது செரிமான பாதையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பவுச்சஸ்களில் ஏற்படும் அழற்சி அல்லது தொற்று ஆகும்.

ரத்த அழுத்தத்தை குறைக்க...

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஃபார்மகாலஜியின் ஆய்வின்படி, சீசனல் காய்கறியான டர்னிப்பில் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் டயட்ரி நைட்ரேட்ஸ்கள் நிறைந்துள்ளன. டர்னிப்ஸ் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது, இது உடலில் இருந்து சோடியத்தை வெளியிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தமனிகள் விரிவடைய உதவுகிறது.

நீரிழிவுக்கு எதிராக...

National Library of Medicine-ன் ஆய்வுகளின்படி டர்னிப் ஜூஸ் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இன்சுலின் அல்லது குளுகோகன் (glucagon) ரேஷியோவை அதிகரிப்பதன் மூலம் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த டர்னிப் காய்கறி உதவும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன்சர் அபாயத்தை குறைக்க...

இந்த காய் புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சில கலவைகளை கொண்டுள்ளது. குறிப்பாக டர்னிப் காய்கறியில் இருக்கும் தாவர அடிப்படையிலான கெமிக்கலான குளுக்கோசினோலேட்ஸ் (glucosinolates) உள்ளன. இவை மார்பக புற்றுநோய் முதல் புரோஸ்டேட் கேன்சர் வரை அனைத்து வகை புற்றுநோய்களையும் தடுக்க உதவும்.

Also Read : காய்கறி மற்றும் பழத்தோல்களை தூக்கி எறியாதீர்கள்... அதிலும் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்...!

எடை இழப்புக்கு...

இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் எடை இழப்புக்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. டர்னிப்பில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் லிப்பிட்ஸ்கள் உள்ளன. இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

நீங்கள் டர்னிப் காய்களைசூப் அல்லது stew -ல் சேர்க்கலாம் அல்லது சாலட்ஸ்களில் சேர்த்தும் சுவைக்கலாம்.
ஹெல்தியான ஸ்னாக்ஸ் செய்ய விரும்பினால் நீங்கள் டர்னிப் கிழங்கு ஸ்லைஸ்களை வறுத்து, உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.
உருளைக்கிழங்குகளுக்கு மாற்றாக நீங்கள் வேகவைத்த மற்றும் மேஷ்டு டர்னிப்ஸ்களை சாப்பிடலாம்.
First published:

Tags: Fully organic vegetables, Vegetables, Winter diet